கொச்சி சமணக் கோயில்

From Wikipedia, the free encyclopedia

கொச்சி சமணக் கோயில்map
Remove ads

கொச்சி சமண கோயில் (Kochi Jain temple) அல்லது தருமநாதர் சமணக் கோயில் என்பது கேரளாவின் கொச்சியில் உள்ள மட்டாஞ்சேரியில் உள்ள ஒரு சமணக் கோவிலாகும்.

விரைவான உண்மைகள் கொச்சி சமணக் கோயில், அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

கோயிலைப் பற்றி

வரலாற்று ரீதியாக, கச்சு, சௌராட்டிரா பகுதிகளைச் சேர்ந்த சமணர்கள் வணிகத்திற்காக கோழிக்கோடு ,ஆலப்புழா போன்றப் பகுதிகளுக்கு வந்தனர். இந்த கோயில் 1904 ஆம் ஆண்டில் (விக்ரம் நாட்காட்டி 1960) தனது கணவர் ஜிவ்ராஜ் தன்ஜியின் நினைவாக இருபாய் ஜிவ்ராஜ் தன்ஜி இந்தக் கோவிலைக் கட்டினார். இந்த கோயில் இந்தியாவின் முக்கிய சமண யாத்ரீக தலங்களில் ஒன்றாகும். [1] [2] கோயிலின் மூல சிலையாக 15 வது தீர்த்தங்கரரான தருமநாதரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. [3] கோயில் கட்டிடக்கலை குசராத்து சமணக் கோவிகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளது. [4] கோயில் வளாகத்திற்குள் சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு சமணக் கோயிலும் உள்ளது. [5]

Remove ads

திருவிழா

சமணர்களின் மிக முக்கியமான வருடாந்திர புனித நிகழ்வான பர்யுசணா திருவிழா ஆண்டுதோறும் எட்டு நாள் சுய சுத்திகரிப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. [5]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads