கொட்டை

From Wikipedia, the free encyclopedia

கொட்டை
Remove ads

கொட்டை அல்லது பழக்கொட்டை (Nut) என்பது சில வகையான தாவர இனங்களில் காணப்படும், தாமாக உடையாத, கடினமான ஓட்டினால் சூழப்பட்ட பழத்தைக் குறிக்கும். ஒரு பலக்கிய சூலகத்தில் இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும்.
Hazelnut, செசுநட், Acorn போன்றன சில எடுத்துக்காட்டுகளாகும்.

Thumb
ஏசுல்நட்
Thumb
செசுநட்
Thumb
Acorn

பொது வழக்கில் பல வகையான வறண்ட விதைகளும், பழங்களும் கூடக் கொட்டைகள் என்று அழைக்கப்பட்டாலும், தாவரவியல் அடிப்படையில் அவை கொட்டைகள் அல்ல. தாவரவியலாளர்கள் பொது வழக்கில் கொட்டைகள் என அழைக்கப்படுபவை அனைத்தையும் உண்மையான கொட்டைகளாக ஏற்றுக் கொள்வதில்லை. பல தாவரங்களில், பழங்கள் வெடிக்கும்போது, விதைகள் சிதறி தாமாகவே வெளிப்பட்டுவிடும் எனினும் கொட்டைகளில் அவ்வாறு நிகழ்வதில்லை. பொது வழக்கில், கடின ஓட்டையும், உண்ணக்கூடிய மையப் பகுதியையும் கொண்ட எதனையும் கொட்டை என வழங்கும் வழக்கம் உள்ளது.[1] உணவு மற்றும் சமையல் குறித்த வழக்கில் பொதுவாக பிரேசில் கொட்டை, பிசுத்தா கொட்டை போன்றவற்றையும் கொட்டைகள்[2] என்று அழைக்கப்பட்டாலும், அவை தாவரவியல் அடிப்படையில் கொட்டைகள் அல்ல.

சில வகையான தாவரக் கொட்டைகள் மனித மற்றும் விலங்குகளுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து வளங்கும் சத்துணவாக அமைந்திருக்கின்றன.

Remove ads

தாவரவியல் வரையறை

தாவரவியல் அடிப்படையில் ஒரு கொட்டை என்பது பெரும்பாலும் ஒற்றை விதையைக் (அரிதாக இரண்டு விதையைக்) கொண்ட காய்ந்த பழத்தைக் குறிக்கும். இதில் சூலகப் பகுதி முதிர்ச்சி அடையும் போது மிகவும் கடினத்தன்மையைப் பெறுகிறது. அதோடு விதையானது சூலகச் சுவற்றோடு (ஓட்டோடு) ஒட்டிக் கொண்டோ, இணைந்தோ அமைந்து விடுகிறது. பொதுவாக கீழான சூலகத்தையும் (inferior ovary), வெடிக்காத பழங்களையும் (indehiscent fruit) கொண்ட தாவரங்களிலேயே இந்தக் கொட்டைகள் காணப்படுகின்றன.

Remove ads

சமையல்சார் அல்லது பொது வரையறை

Thumb
வாதாமின் கொட்டை இடதுபறம், விதை வலதுபுறம்.
Thumb
கொரிய பைன் மர விதைகள். மேற்புறம் ஓடுடையது கீழே ஓடு நிக்கப்பட்ட விதை

சமையலில் கொட்டை என்னும் சொல்லானது அதிகளவில் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகின்றது. சமையலில் பயன்படுத்தக்கூடிய, கடினமான உறையொன்றினுள் இருக்கும், எண்ணெய்த் தன்மை கொண்ட, பெரிய உண்ணப்படக்கூடிய மையப்பகுதியுடைய அனைத்தும் கொட்டை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக கொட்டைகளானது மனிதர்களுக்கும் வன விலங்கினங்களுக்கும் முக்கிய ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன.ஏனெனில் கொட்டைகள் மிக அதிக அளவிலான எண்ணெயைக் கொண்டுள்ளன.கொட்டைகள் மிக அதிக விலையுள்ள உணவாகவும் ஆற்றல் மூலமாகவும் விளங்குகின்றன. மிகப்பெரும் எண்ணிக்கையிலான விதைகள் சமையலுக்கும் , பச்சையாக உண்ணவும்,முளைகட்டி அல்லது வறுக்கப்பட்டு நொறுக்குத் தீனியாகவும் நுகரப்படுகின்றன.கொட்டைகள் அழுத்தப்பட்டு கிடைக்கும் எண்ணெய்,உணவு சமைக்கவும் ஒப்பனைக்கும் பயன்படுகின்றன. கொட்டைகள் (பொதுவாக விதைகள்) வன வாழ் விலங்கினங்களுக்கு முக்கிய ஊட்டச்சத்த ஆதாரமாக விளங்குகின்றன. குறிப்பாக காடைப்பறவை இனங்கள் மற்றும் அணில் போன்ற விலங்குகள் இந்த கொட்டைகளை இலையுதிர் காலத்தில், பருவகாலத்தின் பிற்பகுதியிலும் சேமித்து வைத்து குளிர்காலம் முழுவதும், மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தின்போது பட்டினி கிடக்கையில் உண்ணுகின்றன.

தாவரவியல் அடிப்படையில் அல்லாமல் பொதுவாகக் கொட்டைகள் என வழங்கப்பெறும் சில கொட்டைகள்:

Thumb
முந்திரிக்கொட்டை ஒரு உண்மையான கொட்டையல்ல
Thumb
கடினமான கொட்டையை உடைக்க உதவும் உபகரணம். இந்தியா வில், இமாசலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா அருங்காட்சியகத்தில் பெறப்பட்ட படம்
Remove ads

பயன்பாடுகள்

Thumb
கொட்டைகள், எண்ணெய் கொண்ட விதைகளின் ஊட்டச்சத்து இயல்புகளைக் காட்டும் வரிப்படம்.

எண்ணெய் பதார்த்தத்தைக் கொண்டிருப்பதனால், ஆற்றல் தரும் மூலமாக உள்ளது. இவை சமைக்கப்படாமலோ, சமைக்கப்பட்டோ, அல்லது நொறுக்குத்தீனியாக பதப்படுத்தப்பட்டோ மனிதரால் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இவற்றிலுள்ள எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, சமையலிலோ, அல்லது ஒப்பனைப் பொருட்களாகவோ பயன்படுத்தப்படுகின்றது.

பல வகையான கொட்டைகள் விலங்கு உணவாகவும் அமைகின்றது.

உண்மையான கொட்டைகளாக இருந்தாலும் சரி, பொதுவாக கொட்டை என அழைக்கப்படுவனவாக இருந்தாலும் சரி, பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளில் பொதுவானவையாக உள்ளன.

நல விளைவுகள்

பல நோய்ப் பரவல் இயல் அடிப்படையிலான ஆய்வுகள் கொட்டைகளை உணவாக எடுத்து வரும் மனிதர்களில் Coronary Heart Disease (CHD) வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக அறிவிக்கின்றன[4]. 1993 இல் முதன் முதலாக CHD யிலிருந்து பாதுகாப்பு தொடர்பில் கொட்டைகள் தொடர்புபடுத்தப்பட்டு கூறப்பட்டது[5]. அதன் பின்னர் பல மருந்தியக்கச் சோதனைகள் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதுபோல் வெளிவந்துள்ளன. கொட்டைகளில் உள்ள பல பதார்த்தங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனினும், முக்கியமாக அவற்றிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்னும் பதார்த்தமே காரணம் என மருந்தியக்கச் சோதனைகள் காட்டுகின்றன[6].

அத்துடன் கொட்டைகளில் மிகக் குறந்தளவிலேயே glycemic index (GI) இருப்பதனால்[7], இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை கொண்ட, நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) நோயுள்ள நோயாளிகளின் உணவில் இவ்வகை கொட்டைகள் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகின்றது[8].

கொட்டைகளை உண்ணும் மனிதர்கள் ஓரிரு ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது[9]. ஆனால் இதற்குக் காரணம் கொட்டைகள் உண்ணப்படும்போது வேண்டாத உணவுகளை உண்ணுதல் குறைவதாகவும் இருக்கலாம்[10].

ஊட்டச்சத்துக்கள்

ஆக்கக்கூறுகள்

புதிதாக முளைக்கும் தாவரங்களுக்கு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து மூலமாக கொட்டைகள் விளங்குகின்றன. அவை மிகையளவு கலோரிகளையும் முக்கிய நிறைவுறாத கொழுப்புகள் அமிலங்கலான லினோலிக் அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம்,உயிர்ச்சத்துக்கள் மற்றும் முக்கிய அமினோவமிலங்களையும் (Essential fatty acids) கொண்டிருக்கிண்றன.பெரும்பாலான கொட்டைகள் உயிர்ச்சத்து E, உயிர்ச்சத்து B2, போலேட்டு (உயிர்ச்சத்து B க்கான ஆதாரம்), நார்ச்சத்துக்கள்,ஆகியவற்றுடன் முக்கிய தாதுக்களான மக்னீசியம்,பாசுபரசு,பொற்றாசியம்,தாமிரம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது[11]. வெப்பத்தால் வறுக்கப்படாத பச்சையாக உண்ணக்கூடிய நிலையில் கொட்டைகள் மிக நலமானது.ஏனெனில் வறுக்கப்படும் செயல்முறையில் கொட்டைகளில் உள்ள நல்ல கொழுப்புகள் அழிக்கப்படுகின்றன[12] .வறுக்கப்படாத வாதுமை கொட்டைகளில் (walnut) மற்ற விதை அல்லது கொட்டைகளை விட இரு மடங்கு எதிர் ஆக்சிகரணிகள் உள்ளது[13] .உணவுத்திட்ட முறைகளில் வாதுமையில் உள்ள இந்த எதிர் ஆக்ஸிகரனிகள் தீமையா அல்லது நன்மையா என்பதில் சர்ச்சைகள் நிலவுகின்றன[14][15]. பொதுவாக சமைக்கப்படாத கொட்டைகளே ஆரோக்கியமானவையாக உள்ளன[13]. காரணம் வறுக்கப்படும்போது, அவற்றிலுள்ள 15%ஆரோக்கியம் தரும் எண்ணெய்கள் அழிந்துவிடுகின்றன. வறுக்கப்படும்போது வயது அதிகரிப்பை விரைவாக்கும் சில வேதிப்பொருட்கள் உருவாவதாகவும் கருத்துண்டு. கொட்டைகள் மற்றும் விதைகளின் ஊட்டச்சத்து பண்புகளை கீழ்காணும் அட்டவணை மூலம் அறியலாம்

இந்த அட்டவணையில் நான்கு வகையான விதைகளில் உள்ள பல்வேறு சத்துக்களின் சதவீதம் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் பெயர், புரதம் (protein) ...
Remove ads

பிற பயன்பாடுகள்

Thumb
குதிரை கசுக்கொட்டை என்றழைக்கப்படும் (Aesculus hippocastanum) ஒரு வகை வாதாம் கொட்டை

வாதுமையின் ஒரு வகையான குதிரை கசுக்கொட்டை (horse-chestnut tree) பிரித்தானியத் தீவுகளில் கொன்கர் (conker) என்றழைக்கப்படுகின்றன. கொன்கரிலிருந்து உண்ணவியலாத நச்சுத்தன்மையுள்ள கசப்புச் சர்க்கரைக் கூட்டுப்பொருள்களைக் கொண்டிருக்கும் பொருள் தயாரிக்கப்படுகிறது.கொன்கர் என்ற சிறுவர் வியையாட்டிலும் இந்த மரத்தின் கொட்டைகளை பயன்படுத்தகின்றனர். இவ்வியைாட்டில் விளையாடுபவர் போட்டியாளரின் கொன்கர் கொட்டைகளை தன்னிடமிருக்கும் கொட்டையைக் கொண்டு உடைக்க வேண்டும். இவ்வகை வாதாம் கொட்டைகள் பறவைகளை வேட்டையாடும் கவண் பொறியிலும் தெறிப்புப் பொருளாக பயன்படுகிறது.

Remove ads

வரலாற்றுக்கு முந்தைய நுகர்வு

780,000 ஆண்டுகளுக்கு முன்பு கருவாலிக்கொட்டை(acorns),பிஸ்தா பருப்பு (pistachios),நீர் அல்லிக்கொட்டை (prickly water lillies), நீர் கொம்புச்செடிக் கொட்டை (water chestnuts), மற்றும் பேய்வாதுமைக் கொட்டை (wild almonds) போன்றவை மனித உணவில் முக்கிய பகுதியாக இருந்தது. பிளீத்தொசீன் காலத்தின் போது கொட்டைகளை உடைக்கவும் திறக்கவும் கருவிகளை பிளீத்தொசீன் காலத்திய மனிதர்கள் உருவாக்கியது வரலாற்றில் பதிவாகியுள்ளது[16].கலிஃபோர்னியாவின் பூர்வீக அமெரிக்கர்களால் அஸ்குலஸ் கலிபோர்னிகா (Aesculus californica) (கலிஃபோர்னியா பக்கீயி அல்லது கலிஃபோர்னியா குதிரை செஸ்நட் என்றும் அறியப்படுகிறது)எனும் ஒரு வகை மர வகைக் கொட்டைச்செடியின் பழத்தின் அதன் நச்சுப்பகுதிகள் நீக்கப்பட்ட கொட்டைகள் உண்ணப்பட்டது.

Remove ads

References

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads