ஆதிலாபாத் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
Script error: The module returned a nil value. It is supposed to return an export table.
ஆதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஆதிலாபாத் நகரில் உள்ளது. 16,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,488,003 மக்கள் வாழ்கிறார்கள். பிரிப்புக்குப் பிறகு இம்மாவட்டம் தெலுங்கானா மாநிலத்தில் அமையும். புகழ்பெற்ற ஸ்ரீ ஞான ஸரஸ்வதி அம்மன் திருக்கோவில் இம்மாவட்டத்தின் பாஸர் என்ற கிராமத்தில் உள்ளது. ஆந்திரத்தின் காகிதபுரம் இம்மாவட்டத்தில் உள்ள ஸிர்புரில் அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் நிர்மல், அசிபாபாத் மற்றும் மஞ்செரியல் வருவாய் கோட்டங்களை, அக்டோபர், 2016-இல் நிர்மல் மாவட்டம், மஞ்செரியல் மாவட்டம் மற்றும் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்களாக நிறுவப்பட்டது.[1]
Remove ads
வரலாறு
வரலாற்று ரீதியாக, குதுப் ஷாஹிஸின் ஆட்சியில் ஆதிலாபாத் மாவட்டம் எட்லாபாத் என்று அழைக்கப்பட்டது.[2]
பெரிதும் காடுகள் நிறைந்த கோதாவரி படுகை மெசோலிதிக் மற்றும் பேலியோலிதிக் காலங்களுக்கு உட்பட்வை இங்கு லக்செட்டிபேட், கோமரம் பீம் , போத் , பைன்சா , மற்றும் நிர்மல் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.[3]
ககாதியா வம்சத்தின் காலத்தில் செய்யப்பட்ட சில தெலுங்கு கல்வெட்டுகள் ஆதிலாபாத் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை குறிக்கிறது.
அக்டோபர் 2016 இல் மாவட்ட மறுசீரமைப்பின் காரணமாக ஆதிலாபாத் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை ஆதிலாபாத் மாவட்டம் கோமரம் பீம் மாவட்டம் , மஞ்சேரியல் மாவட்டம் மற்றும் நிர்மல் மாவட்டம் என்பனவாகும்.[4]
Remove ads
புவியியல்
ஆதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது வடக்கே யவத்மால் மாவட்டமும் , வடகிழக்கில் சந்திரபூர் மாவட்டமும் , கிழக்கே கோமரம் பீம் மாவட்டமும் , தென்கிழக்கில் மஞ்சேரியல் மாவட்டமும் , தெற்கே நிர்மல் மாவட்டமும், மேற்கில் மேற்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தே மாவட்டம் இதன் எல்லைகள் ஆகும். இந்த மாவட்டம் 4,153 சதுர கிலோமீட்டர் (1,603 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[5]
பொருளாதாரம்
2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆதிலாபாத்தை நாட்டின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக பெயரிட்டது.[6] இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பிஆர்ஜிஎஃப்) நிதி பெறுகிறது.[6]
புள்ளிவிபரங்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதிலாபாத் மாவட்டத்தில் 708,972 மக்கள் வசிக்கின்றனர்[7]
2011 இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது ஆதிலபாத் மாவட்டத்தில் 59.36% மக்கள் தெலுங்கு மொழியையும் , 13.61% மராத்தி மொழியையும் , 9.18% உருது மொழியையும் , 7.62% கோண்டி மொழியையும் , 6.82% இந்தி மொழியையும் , 1.43% கோலாமி மொழியையும் , 0.69% பெங்காலி மொழியையும் மற்றும் 0.51% கோயா மொழியையும் முதன்மை மொழியாக கொண்டிருந்தனர்.[8]
மதங்கள்
ஆதிலாபாத் மாவட்டத்தின் கானாபூர் மண்டலில் உள்ள படன்கூர்த்தி கிராமம் ஆராச்சி செய்யப்பட்டது.[9] இதன்போது பௌத்த மடத்தின் எச்சங்கள் படன்கூர்த்திக்கு அருகிலுள்ள கோதாவரி ஆற்றின் ஒரு சிறிய தீவில் கண்டுபிடிக்கப்பட்டன. பைன்சா நகரம் ஆரம்பகால பௌத்த மதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு மேட்டின் அருகே ஒரு ஜோடி செதுக்கப்பட்ட கால்கள் காணப்பட்டன. இஸ்லாமியம் ஆதிலாபாத் மாவட்டத்தின் ஒரு முக்கிய மதமாகும்.[10]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
ஆதிலாபாத் மாவட்டம் ஆதிலாபாத் மற்றும் உத்நூர் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டது.[11]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads