கொலெத்தான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொலெஸ்தான் மாகாணம் (Golestān Province (Persian: استان گلستان, Ostān-e Golestān) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்கிலும், காசுபியன் கடலின் தெற்கிலும் உள்ளது. மாகாணத்தின் தலைநகராக கோர்கான் நகரம் உள்ளது.
இந்த மாகாணமானது ஈரானின் முதல் வட்டாரத்தில் உள்ளது. நாட்டில் உள்ள மாகாணங்களின் வளர்சியை நோக்கமாக கொண்டு மாகாணங்களை 2014 சூன் 22 அன்று ஐந்து பிராந்தியங்களாக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த மாகாண மக்களில் சுன்னி முசுலீம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.[5][6]
1997இல் மசந்தரன் மாகாணத்திலிருந்து கொலெஸ்தான் மாகாணம் பிரிக்கப்பட்டது. இதன் மக்கள் தொகையானது 1.7 மில்லியன் (2011) ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 20,380 கி.மீ.² ஆகும். மாகாணமானது அலாபாத் கவுண்டி, அக்வாலா கவுண்டி, ஆசாத்ஷாஹார் கவுண்டி, பண்டார்-இ-கஸு கவுண்டி, கோன்பட்-இ-கபூசு கவுண்டி, கர்கான் கவுண்டி, கலகௌக் கவுண்டி, கர்ட்க்யூய் கவுண்டி, மராவ் தொப்பே கவுண்டி, மினுட்ஷஷ்ட் கவுண்டி, ராமியன் கவுண்டி, மற்றும் டர்காம் கவுண்டி என பன்னிரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு

இந்தப் பகுதியில் மனித குடியேற்றங்களானது கி.மு 10,000 முன்பு ஏற்பட்டது. இதற்கு சான்றாக பண்டைய நகரமான ஜொன்ஜான் நகரத்தின் சான்றுகள் தற்போதைய நகரமான கோன்பட்-எ காஸ்ஸுக்கு அருகில் காணப்படுகின்றன. இது பட்டுச் சாலையில் அமைந்திருந்த பாரசீகத்தின் முக்கிய நகரமாகும்.
மக்கள்வகைப்பாடு
இந்த மாகாணத்தின் இனக்குழுக்களின் விகிதம் குறித்து 2006 ஆண்டில் ஈரான் கல்வி அமைச்சகத்தின் மதிப்பிடு பின்வருமாறு:
- துர்க்மென்: 34.20%
- மசாந்தரனிகள்: 30.40%[7][8][9]
- சிஸ்தானிகள்: 14.90%
- பாலுசிகள்: 10.90%
- கிசிபாஸ்கள்: 7.30%
- பிறர் (அசீரியர், Kazakhs, குர்மஞ்சி, ஆர்மேனியர், சியார்ச்சியர் போன்றோர்): 2.3%
பெரும்பாலான மசாந்தரனிகள் கோர்கனில் வாழ்கின்றனர். அலி அபாத், கோர்ட்குய், பண்டார்-இ காஸ், கோன்பட்-எ காஸ் ஆகிய மக்கள் மசாந்தரனி மொழிகளைப் பேசுகின்றனர்.[7][8][9][10][11]
மாகாணத்தின் வட பகுதியில் உள்ள டர்க்மேன் சஹாரா என்ற சமவெளி பகுதியில் துருக்மென் மக்கள் வசிக்கிறார்கள். இந்த முன்னாள் நாடோடி மக்கள் 15ஆம் நூற்றாண்டு முதல், இந்த பகுதியில் வசிக்கின்றனர், இப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் கோன்பட்-இ கவுஸ் மற்றும் பந்தர் டோர்ராமன் ஆகும். இந்த துருக்மன்கள் இசுலாத்தை பின்பற்றுபவர்களாகவும் மற்றும் சுன்னி பிரிவின் ஹானியி பள்ளிக்குச் செல்கின்றவர்களாக உள்ளனர். இவர்கள் கோர்கன், அலி அபாத், கலால் போன்ற கிழக்கு நகரங்களில் சிறுபான்மை சமூகத்தவராக வாழ்கின்றனர். துருக்மன்கள் முழுக்க சுன்னி பிரிவினராக உள்ளனர்.
மாகாணத்தில் பாரசீக சிஸ்தானிகள் மற்றும் பாலூச் ஆகிய மக்களின் அண்மைய வருகையானது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தது. இவர்களின் தாயகமான சின்ஸ்தானின் பகுதிகளில் ஏற்படும் வறட்சியின் காரணமாக இன்னும் சிலர் இப்பகுதிக்கு வருகின்றனர். துருக்கிய மக்கள் (அஜீரி மற்றும் கிசில்லாஷ்) முழுமையாக இசுலாத்தின் ஷியா பிரிவினராக உள்ளனர்.
இப்பகுதியில் வசிக்கும் கிசிபாஸ்கள், கசாக்ஸ், ஜோர்ஜியர்கள், ஆர்மீனியர்கள் போன்ற மற்ற இனக்குழுக்கள் தங்களின் மரபுகள் மற்றும் சடங்குகளை பாதுகாத்து வருகின்றனர். ஜாபோலி மற்றும் பாலூச் ஆகிய மக்களின் அண்மைய வருகையானது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டது. தற்காலத்திலும் இந்த மக்கள் அவர்களின் தாயகமான சிஸ்தான் (சபோலின் தலைநகரம்) மற்றும் பெலுசிஸ்தான் ஆகிய பிரதேசங்களில் நிலவும் நீடித்த வறட்சி காரணமாக இன்றும் இப்பகுதியை நோக்கி வருகின்றனர்.
கோலாஸ்டனில் (ஷாமாஸ்பான்ட்) சிறுபான்மையினராக பகாய் சமய மக்கள் வசிக்கின்றனர்.[12][13]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads