கொல்லம் வானூர்தி நிலையம்
கேரள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்லம் வானூர்தி நிலையம் (Quilon Aerodrome) என்பது தென்னிந்தியாவின் முந்தைய திருவிதாங்கூர் நாடும், இன்றைய கேரள மாநிலத்தின் கொல்லம் நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும் . [1] 1920 களில், சென்னை மகாணத்தை பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்தில் கொச்சின், திருவிதாங்கூர் மற்றும் மலபார் மாவட்டங்களில் குடிமை சமூகத்திற்கான வேறு வானூர்தி நிலையங்கள் இல்லை என்ற நிலை இருந்தது. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு தெற்கே 1932 ஆம் ஆண்டில் சமஸ்தான தலைநகருக்கு 57 கிலோமீட்டர்கள் (35 mi) தெற்கே, உருவாக்கபட்டது. இது ஆசிரமம் மைதானம் என்று அறியப்பட்டது.
வானூர்தியின் தரையிறங்கும் பகுதி அருகிலுள்ள மலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்புரைக்கற்றகளால் பலப்படுத்தப்பட்டது, ஏனெனில் அங்கு ஏற்னவே இருந்த தளர்வான மண் வானூர்தி நிலையத்திற்ககுப் பொருந்தாது. வானூர்தி நிலையத்தில் கட்டிடங்கள் எதுவும் இல்லை, இருப்பினும், நிறுத்தப்படும் விமானங்களுக்கான வட்ட கான்கிரீட் திண்டு கட்டப்பட்டது. வானூர்தி நிலையம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. வானூர்தி நிலையம் பயிற்சிகளுக்ககும் பயன்படுத்தப்பட்டது. வானூர்தி நிலையத்ததின் எல்லையில் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட விபத்தானது, விமானி மற்றும் பயிற்சிபெற்றவரின் மரணத்திற்கு காரணமாக ஆனாதால் இவை நிறுத்தப்பட்டன.[2]
Remove ads
பழைய வானூர்தி நிலையத்தில் வானூர்தி பயிற்சி பள்ளிக்கான திட்டம்
2009 -2012 காலப்பகுதியில், உள்ளூர் அதிகாரிகள் வானூர்தி பயிற்சி பள்ளிக்காக வானூர்தி நிலையத்தைப் புதுப்பிக்க திட்டமிட்டனர். [3] இலகுரக விமானங்களுக்காக 4,000 அடி ஓடுபாதை. இருக்கிறது என்றாலும், இந்த தளத்தைச் சுற்றி இப்போது கட்டிடங்கள் மற்றும் செல்பசி கோபுரங்கள் போன்ற பல உயரமான கட்டமைப்புகளால் சூழப்பட்டிருப்பதாலும், இந்த திட்டத்துக்கு உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சேபனைகள் தோன்றியதாலும், திட்டம் நிராகரிக்கப்பட்டது. [4]
Remove ads
வான்வழித் திட்டங்களின் மறுமலர்ச்சி
கேரள அரசு அஸ்ராம் பழைய வானூர்தி நிலைய பகுதி உட்பட 10 வான்வழிப் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியது. இது தொடர்பாக பிப்ரவரி 2020 அன்று மாநில அரசு இந்திய சிவில் விமான அமைச்சகத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. [5] [6] [7] [8]
மேலும் காண்க
- திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
- கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
- இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads