கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்

தமிழ்நாட்டில் உள்ள இராம்சார் தளம் From Wikipedia, the free encyclopedia

கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்map
Remove ads

கோடியக்கரை வன உயிரின உய்விடம் அல்லது கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967-ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வன உயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ. ஆகும். இந்தச் சரணாலயத்தில் பல்வேறுவிதமான கடல் பறவைகள் தென்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது.[2]

விரைவான உண்மைகள்

இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம்.

Remove ads

கைவிடப்பட்ட குதிரைகள்

ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு இங்கே விட்டுவிடப்பட்ட முன்னாள் வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும், கான்வளர் குதிரைகள் இங்கு காணப்படுகின்றன.

1000 ஆண்டுகள் பழைமையான கலங்கரை விளக்கம்

இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற் காணப்படுகிறது.[1]

150 வகையான தாவரங்கள்

இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன[3].

விலங்குகள்

இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு.

பல்வேறு வகையான பறவைகள்

இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்காப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன [4].

இதர விவரம்

இக்காப்பகம் சாலை வழியே நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச், ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும்[3].

இதனையும் காண்க

மேற்கோள்கள்

படிமங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads