கோட்டையூர், சிவகங்கை மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டையூர் (ஆங்கிலம்:Kottaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள காரைக்குடி புறநகர் பகுதி ஆகும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பேரூராட்சி ஆகும். கோட்டையூர் பேரூராட்சி கோட்டையூர், கோ.வேலங்குடி, கல்லாங்குடி என மூன்று வருவாய் கிராமங்களைக் கொண்டது.
- இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, கோட்டையூர் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
Remove ads
காரைக்குடி மாநகராட்சியுடன் இணைத்தல்
இப்பேரூரட்சியை புதிதாக நிறுவப்பட்ட காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,803 வீடுகளும், 14,766 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 6.75 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 136 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், உட்பட்டது.[5]
சிறப்புகள்
இவ்வூரானது கோட்டை போன்ற வீடுகள் நகரத்தார்களால் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள பெண் தெய்வமான கோட்டை நாச்சியம்மன் பெயரில் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது.
கல்லாங்குடியில் அமைதுள்ள திருபாகதீஸ்வரர் திருகோவில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டதாகும், கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள வயல்நாச்சியம்மன் கோவில் ஏழூர் செவ்வாய் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும் சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஏழு கிராமங்களை உள்ளடங்கிய மக்கள் வழிபடுவர். கல்வி தந்தை டாக்டர். ராம. அழகப்பச் செட்டியார் கோட்டையூரில் பிறந்தவர். அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா கல்விநிலையங்கள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது. பாரம்பரிய செட்டிநாடு அரண்மனை வீடுகள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.12°N 78.82°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 77 மீட்டர் (252 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads