கோட் திஜி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட் திஜி (Kot Diji) (Urdu: کوٹ ڈیجی) பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் கைர்பூர் மாவட்டத்தில் அமைந்த சிந்து வெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாகும். கிமு 3,300 பழமையான கோட் திஜி தொல்லியல் களம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒரு தொல்லியல் மேட்டில் 12 மீட்டர் உயரத்தில் அமைந்த தொல் அரண்மனையும் மற்றும் அதன் வெளிப்புறங்களையும் கொண்டது.
பாகிஸ்தான் நாட்டின் தொல்லியல் துறை, 1955 மற்றும் 1957-ஆண்டுகளில் கோட் திஜியில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டது.[1]
கோட் திஜி தொல்லியல் களம், சிந்து மாகாணத்தில் உள்ள கைர்பூர் நகரத்திலிருந்து தெற்கே 24 கிலோ மீட்டர் தொலைவில், சிந்து ஆற்றின் கிழக்கு கரையில், மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தின் ரோக்கிரி மலையடியரத்தில் இத்தொல்லியல் களம் உள்ளது.
ரோக்கிரி மலையில் கோட் திஜி மலைக்கோட்டை 1790ல் தல்பூர் வம்ச ஆட்சியாளர் மீர் சுராப் நிறுவினார்.
Remove ads
தொல்லியல்
துவக்க கால அரப்பா நகரங்கள் (கிமு 4000 – 3000)
பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை வளர்ச்சி பெருகிய காலத்தில், கோட்டையுடன் கூடிய நகரங்கள் தோன்றியது.
பாகிஸ்தானின் துவக்ககால கோட்டை நகரம், கிமு 4000 ல் பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வாவின், ரெமான் தெக்ரியில், சோப் ஆற்றுச் சமவெளியில் கட்டப்பட்டது. துவக்க அரப்பா காலத்திய மற்றொரு கோட்டை நகரமான பிற கோட்டை நகரங்களான அம்ரி (3600–3300 கிமு) மற்றும் கோட் திஜி மற்றும் காக்ரா ஆற்றின் கரையில் உள்ள இந்தியாவின் காளிபங்கான் ஆகும். [2][3][4][5]
Remove ads
கோட் திஜி பண்பாடு (3300–2600 கிமு)
கோட் திஜி தொல்லியல் களம் 2.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இத்தொல்லியல் நகரம் துவக்க கால அரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தது.[6]
கோட் திஜியின் பண்பாட்டுக் காலத்தின் முதல் கட்டத்தில் (கிமு 2605), செப்பும், தாமிரமும் பயன்படுத்தப்படவில்லை.[7]
கோட் திஜி தொல்லியல் களத்தின் வீடுகள் மற்றும் கோட்டைகள் வெறும் கல் மற்றும் களிமண்ணால் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. செங்கற்கள் பயன்படுத்தப்படவில்லை. கோட் திஜியின் கட்டிட அமைப்புகள், முண்டிகாக் தொல்லியல் களத்தின் கட்டிட அமைப்புகள் போன்றுள்ளது. கோட் திஜியின் மட்பாண்டங்கள், அரப்பா போன்ற வடிக்கப்பட்டுள்ளது. [8] பின்னர் சொந்த பயன்பாட்டிற்கான அணிகலன்களை செய்வதற்கு செப்பு பயன்படுத்தியுள்ளனர். மட்பாண்டம் செய்வதற்கான சக்கரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தது.
துவக்க கால அரப்பாவின் தொல்லியல் களங்களில் ஒன்றான கோட் திஜி இரண்டு அடுக்களை கொண்டது. ஒரு அடுக்கு மலை மீதும், மற்றொரு அடுக்கு மலையடிவாரத்திலும் உள்ளது. மலைமீது, சுற்றுச் சுவருடன் கூடிய 500 அடி நீளம், 350 அடி அகலம் கொண்ட ஒரு கோட்டையும், மலயடிவாரத்தில் ஒரு நகரமும் அமைக்கப்பட்டிருந்தது. நகரத்தில், கருங்கல் அஸ்திவாரங்களுடன், களிமண் செங்கற் சுவர்களால் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் கிடைமட்டத்தில் கோடுகளுடன் கூடியதாக இருந்தது.
கோட் திஜி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருள்கள் மண் பாணைகள், கிண்ணங்கள், தட்டுகள், தாழிகள், பொம்மை வண்டிகள், பந்துகள், வளையல்கள், மணிகள் மற்றும் விலங்குகள் மற்றும் தாய் தெய்வத்தின் சுடுமண் சிற்பங்கள் மற்றும் செப்பு விற்கள் ஆகும்.
அரப்பாவை நோக்கிய முன்னேற்றம்
பளபளக்கும் நவரத்தின கற்கள் கொண்டு மணிகள் தயாரிக்கப்பட்டது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ண மட்பாண்டங்கள் செய்வதிலிருந்து மாறி அழகிய கோட் திஜி மட்பாண்ட வகைகள் செய்தனர். பின்னர் சிறிது சிறிதாக அரப்பா மட்பாண்டத்திற்கு முன்னேறினர்.[9]சிந்துவெளியின் துவக்க கால எழுத்துகள், கோட் திஜி மட்பாண்டங்களிலும், முத்திரைகளிலும் காணப்படுகிறது. கோட் திஜி காலத்தில் எடையளவுக் கருவிகளாக முத்திரையிட்ட கல்வெட்டுக் கற்கள் பயன்படுத்தப்பட்டது.[10] பிந்தைய கால கோட்-திஜி மட்பாண்டங்கள், தற்கால ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பர்சஹோமில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரும் தீ
பண்டைய கோட்-திஜி தொல்லியல் நகரம் தீயில் முழுவதுமாக எரிந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஏன் இந்நகரம் எரிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை. [11]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads