முண்டிகாக்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முண்டிகாக் (Mundigak) (பஷ்தூ: مونډي ګاګ), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் அமைந்த வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய தொல்லியல் நகரம், காந்தாரத்திற்கு வடமேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் ஷா மக்சூத் அருகே, குஷ்க்-இ-நக்கூத் ஆற்றின் சமவெளியில் உள்ளது. பண்டைய முண்டிகக் நகரம், சிந்து சமவெளி நாகரீக பொருட்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள் முண்டிகாக்مونډي ګاګ, நாடு ...
Remove ads

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய பண்டைய முண்டிகக் நகரம், கிமு ஐந்தாயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்து விளங்கியதை, முண்டிகக் நகரத்தின் ஒன்பது மீட்டர் உயரம் கொண்ட தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த தொல்பொருட்கள் மூலம் அறியமுடிகிறது.[1]

முண்டிகக் தொல்லியல் களத்தில் கிடைத்த கிமு மூவாயிரம் ஆண்டு காலத்திய மட்பாண்டங்கள் மற்றும் பிற தொல்பொருட்கள் மூலம், முண்டிகக் நகரம் முக்கிய மையமாக விளங்கியதையும், இந்நகரம் தற்கால பலுசிஸ்தான், துருக்மேனிஸ்தான் மற்றும் சிந்து வெளியின் அரப்பாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

ஆப்கானித்தானின் ஹெல்மெண்ட் பண்பாட்டுக் காலத்தின் போது, முண்டிகக் நகரம் செழிப்புடன் விளங்கியது.[2]

21 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட முண்டிகக் தொல்லியல் களம், ஹெல்மண்டு பண்பாட்டின் இரண்டாவது பெரிய தொல்லியல் களமாகும்.[3] பண்டைய முண்டிகக் நகரம் கிமு 2,200 முதல் வீழச்சியடையத் துவங்கியது. [4]

சிந்து வெளியுடனானத் தொடர்புகள்

ஆப்கானித்தானின் பண்டைய முண்டிகக் நகரம், சிந்து சமவெளி நாகரீக பொருட்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது. அவைகளில் பீங்கானால் செய்யப்பட்ட பாம்புகள், திமில்கள் கொண்ட காளைகள் மற்றும் பிற பொருட்கள், சிந்து வெளி தொல்லியல் களங்களில் கண்டெடுத்த தொல்பொருட்கள் போன்று உள்ளது.[5]

சிந்து வெளி தொல்லியல் களங்களில் ஒன்றான கோட் திஜி தொல்லியல் களத்தில் கண்டெடுத்த மட்பாண்டஙகளும், ஆப்கானித்தானின் முண்டிகக் தொல்லியல் களாத்தில் கண்டெடுத்த மட்பாண்டங்களும் வடிவத்திலும், தரத்திலும் ஒரே மாதிரியாக உள்ளது.[6]

Remove ads

கட்டிடக் கலை

முண்டிகக் தொல்லியல் களத்தை 1951-58களில் சாசல் என்பவர் அகழ்வாய்வு செய்தார். கண்டிகக் தொல்லியல் களத்தின் ஒரு மேட்டில், அரண்மனையின் சிதிலமடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு தொல்லியல் மேட்டில் பெரிய கோயில் போன்ற அமைப்பின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் கண்டிகக் தொல்லியல் களம் நகரப் பண்பாட்டுடன் விளங்கியது எனக் கருதப்படுகிறது.[5]

கிமு 3,000களில் முண்டிக் தொல்லியல் களத்தின் வெள்ளையடிக்கப்பட்ட கட்டிட அமைப்புகளும், சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட கதவுகளும், பெருந்தூண்களும், இவ்விடம் சமய வழிபாட்டு மன்றமாக இருந்ததற்கு சான்றாக விளங்குகிறது. [1]

Remove ads

கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்

கண்டிகக் தொல்லியல் களத்தில் மட்பாண்டங்களுடன், வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களும், மற்றும் சுட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்ட பயங்கரமான தோற்றம் கொண்ட திமில்களுடன் கூடிய காளை மற்றும் மனித உருவங்களும், கோடாரிகளும், புலித் தோற்றம் மனித உருவங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. துளையிட்ட அச்சுகள், வெண்கல அச்சுகள் மற்றும் சுடுமண் வடிகால் குழாய்கள் இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது.[5]புலி உருவ மனிதர்களின் ஓவியம் வரைந்த மட்பாண்டங்களும், அத்தி மர இலைகளின் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களும் இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. [7]மேலும் பல கல் பொத்தான் முத்திரைகளும் கண்டிகக் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. [8] வட்ட வடிவ மணிகள், உருளை வடிவ மணிகள்,[9]தாமிர அச்சு முத்திரைகள், தாமிர ஊக்குகளும், சுருள் கொக்கிகளும் இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது.[10] கிமு மூவாயிரம் ஆண்டிற்கு முந்தைய ஐந்து செண்டி மீட்டர் உயரம் கொண்ட பெண் தோற்றம் கொண்ட மனித உருவங்களும் இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது.[1]

கண்டிகக் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த முக்கியத் தொல்பொருட்கள் காபூல் அருங்காட்சியகம் மற்றும் பிரான்சு நாட்டின் குய்மெட் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads