கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் என்பது, இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,[1] 11°01′12.7″N 76°57′16.6″E (அதாவது, 11.020200°N 76.954600°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து, இந்நிலையம் சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. தினமும் சுமார் 144 எண்ணிக்கையிலான தொடருந்துகள், இந்நிலையத்தைக் கடந்து செல்கின்றன.[2] 2022 ஆம் ஆண்டு சூன் மாதம், இந்தியாவின் முதலாவது பாரத் கௌரவ் தொடருந்து, கோயம்புத்தூரிலிருந்து சீரடி நோக்கி பயணம் புறப்பட்டது இந்நிலையத்திலிருந்து தான்.[3] ரூ.3.62 கோடி செலவில், கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையத்தில், இரயில்வே நடைமேம்பாலம் நீட்டிப்பு பணிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.[4]
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [5][6][7][8][9]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [10][11][12][13][14][15][16][17][18][19][20]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads