கோரம் மாகாணம்
துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோரம் மாகாணம் (Çorum Province, ( துருக்கி மொழி : Çorum İli ) என்பது துருக்கியின் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள ஒரு மாகாணமாகும். கருங்கடல் பாராந்தியத்தில் உள்ள நிலப்பகுதி என்றாலும் இது கடற்கரையை ஒட்டி இல்லாமல் சற்று உள்நாட்டில் உள்ள பகுதியாகும். மேலும் கருங்கடல் கடற்கரையை விட மத்திய அனடோலியாவின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அதன் மாகாண தலைநகரம் கோரம் நகரம் ஆகும். இதன் போக்குவரத்துக் குறியீடு 19 ஆகும்.
Remove ads
நிலவியல்
கோரம் மாகாணமானது மலைகள் மற்றும் உயர் பீடபூமி போன்றவை சேர்ந்த பகுதி ஆகும். இவற்றில் சில பகுதிகளில் கோசலர்மக் மற்றும் யேசிலர்மக் ஆறுகள் பாய்கின்றன. மாநகரம் மற்றும் நகரங்களிலிருந்து வரும் உல்லாசப் பயணிகள் மலை ஏற்றம், வன நடை போன்றவை மேற்கொள்ளத்தக்க கவர்ச்சிகரமான உயர்ந்த புல்வெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டதாக இந்த மாகாணத்தில் உள்ளது. மேலும் இந்த கோரம் பகுதியானது பூமியின் புவியியல் மையம் என்றும் அழைக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டில், ஹோல்கர் ஐசன்பெர்க்கின் திருத்தப்பட்ட கணக்கீடு ஒவ்வொரு 2' (பூமத்திய ரேகைக்கு அருகில் 3.7 கி.மீ) தரவு புள்ளிகளுடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட ETOPO2 உலகளாவிய டிஜிட்டல் உயர மாதிரியை (DEM) பயன்படுத்தி 40 ° 52′N 34 ° 34′E இன் துல்லியமான முடிவுக்கு வழிவகுத்தது கோரம், துருக்கி (அங்காராவிலிருந்து 180 கி.மீ வடகிழக்கு) பகுதியில், உட்ஸின் கணக்கீட்டை உறுதிப்படுத்தியது.

Remove ads
வரலாறு

பழங்கற்கால, கற்காலக் காலத்திலும், செம்புக்காலத்தின் நான்கவது கட்டத்திலும் கோரம் பகுதியில் குடியேற்றங்கள் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த காலங்களின் எச்சங்கள் Büyük Güllüce, Eskiyapar மற்றும் Kuşsaray இல் காணப்படுகின்றன.
பிற்காலத்தில் கோரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் இட்டைடு பேரரசின் ஆதிக்கத்தில் இருந்ததன.மேலும் போனாஸ்கேல் மாவட்டத்தில் அனடோலியாவின் மிக முக்கியமான ஹிட்டிட் தளங்களில் அத்துசா ஒன்றாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இபட்மெற்ற பகுதியாகும். அத்துசா கி.மு. 1700 முதல் கி.மு. 1200 வரை இட்டைடு பேரரசின் தலைநகரமாக இருந்தது. மற்ற முக்கியமான இட்டைடு தளங்களாக யசாலகாயா மற்றும் அலகாஹாய்கில் உள்ள திறந்தவெளி கோயில்கள் போன்றவை அடங்கும்; அரச கல்லறைகள்; மற்றும் இட்டைடுகளுக்கும் பண்டைய எகிப்தியர்களுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை நிரூபிக்கும் வரைப்பட்டி உட்படவை போனாஸ்கியின் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
பின்னர் மற்ற நாகரிகங்களைச் சேர்ந்த இனத்தவர்கள் வந்தனர்: பிரிகியர்களில் வெளியேறியவர்கள் தவிர எஞ்சியவர்கள் கோரமின் வடக்கு பகுதியில் உள்ளனர்.
பின்னர் சிம்மிரியர்கள், மீடியாப் பேரரசு, பெர்சியர்கள், கலாத்தியர், ரோமர், பைசாந்தியர், செலயூக்கியர்காள், துருக்கியர்கள், டேனிஷ்மெண்ட்ஸ், மங்கோலியப் பேரரசு ( இல்கானேடு ), எரெட்னிட்ஸ், கடி பர்ஹன் அல்-தின் மற்றும் இறுதியாக உதுமானியப் பேரரசு ஆகியவை வந்தன. இட்டைட்டு பேரரசு கால தொல்பொருட்கள் மற்றும் மாகாணத்தில் செல்யூக் மற்றும் ஒட்டோமான் காலங்களைச் சேர்ந்த பல கோட்டையகங்கள், பாலங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளன.
1980 ஆம் ஆண்டில், தேசியவாத இயக்கக் கட்சி தீவிரவாதிகள் அலெவி துர்க் சிறுபான்மையினருக்கு எதிரான ஓரம் படுகொலையைச் செய்தனர். இதில் 57 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads