கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம்

கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம்map
Remove ads

கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் அல்லது புத்ரா பன்னாட்டு வணிக மையம் (மலாய்; Pusat Dagangan Dunia Kuala Lumpur அல்லது Pusat Dagangan Dunia Putra; ஆங்கிலம்: World Trade Centre Kuala Lumpur; அல்லது Putra World Trade Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (PWTC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும்.

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் World Trade Centre Kuala Lumpur Pusat Dagangan Dunia Kuala Lumpur, மாற்றுப் பெயர்கள் ...

இந்த வணிக மையம் 235,000 சதுர அடி கண்காட்சி அரங்கத்துடன் 1.7 மில்லியன் சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ளது.[4].[2]

Remove ads

பொது

இந்த வணிக மையம், மலேசியாவின் வரலாற்று மாநாட்டு மையமாகக் கருதப்படுகிறது. மேலும், பன்னாட்டு அளவிலான மாநாடுகள், இசைக் கச்சேரிகள், உள்ளூர்த் திருமணங்கள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிற்சிகள், கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒரு விருப்பமான இடமாகவும் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வணிக மையத்தின் கட்டுமானம் 1981-இல் தொடங்கப்பட்டு 1984-இல் நிறைவடைந்தது; அதிகாரப் பூர்வமாக 26 செப்டம்பர் 1985 அன்று திறக்கப்பட்டது.[5]

மலேசியாவின் தலையாய அரசியல் கட்சிகளில் ஒன்றான அம்னோவின் (UMNO) பொதுக் கூட்டங்கள், இந்த மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

Remove ads

அமைவு

கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம், கோலாலம்பூர் நகரின் வடமேற்கு மூலையில் உள்ள புத்ரா சாலையில் (Jalan Putra) அமைந்துள்ளது. பத்து ஆறு மற்றும் கோம்பாக் ஆறு ஆகிய ஆறுகளின் சங்கமம் மாநாட்டு மையத்திற்குப் பின்னால் உள்ளது.

கோலாலம்பூர் செரி பசிபிக் தங்கும் விடுதி, சன்வே புத்ரா தங்கும் விடுதி, கோலாலம்பூர் டைனஸ்டி தங்கும் விடுதி மற்றும் கோலாலம்பூர் செரட்டன் இம்பீரியல் தங்கும் விடுதி போன்ற பல தங்கும் விடுதிகளுக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[6]

Remove ads

போக்குவரத்து

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்களில் உள்ள  SP4 ,  AG4  புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையத்திற்கு இந்த வணிக மையத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்; தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ள  KA04  புத்ரா கொமுட்டர் நிலையம்; ஒரு பாதசாரி மேம்பாலம் வழியாக இந்த வணிக மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

காட்சியகம்

புத்ரா பன்னாட்டு வணிக மையத்தின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads