கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம்
கேரள கலங்கரை விளக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம் (Kovilthottam Lighthouse) என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில் கோவில்தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.. 18 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்க கோபுரமானது கருப்பு, வெள்ளை பட்டைகள் பூசப்பட்டள்ளன. [3] அஷ்டமுடி ஏரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீண்டகரை துறைமுகத்தின் பயன்பாட்டுக்கு கலங்கரை விளக்கம் அமைக்கபட்டுள்ளது.
Remove ads
அமைவிடம்
கோவில்லோட்டம் கலங்கரை விளக்கம் கொல்லம் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது கொல்லம் நகர மையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சவறை - 2.6 கி.மீ.
- நீண்டகரை - 8.6 கி.மீ.
- கருணகப்பள்ளி - 10 கி.மீ.
- தங்கசேரி கலங்கரை விளக்கம் - 15.2 கி.மீ.
- கொல்லம் - 20 கி.மீ.
- பரவூர் - 40.7 கி.மீ.
வரலாறு
கோவில்தோட்டம் கட்டுவதற்கு முன்பு, இந்த இடத்தில் ஒரு கொடி மேடை இருந்தது. பின்னர், இங்கு ஒரு மர கோபுரம் கட்டப்பட்டது. சிமிட்டிடும் டிஏ வாயு விளக்கு 14 பிப்ரவரி 1953 இல் நிறுவப்பட்டது. இந்த தற்காலிக ஏற்பாடு 1960-1961ல் தற்போதைய கலங்கரை விளக்க கோபுரம் கட்டி முடிக்கும்வரை இருந்தது. [4]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads