கௌர் பிராமணர்கள்
இந்தியவிலுள்ள ஒரு சமூகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌர் பிராமணர்கள் (Gaur Brahmins) (மேலும் கோர், கௌர், கவுட் அல்லது கௌடா என்றும் உச்சரிக்கப்படுகிறார்கள்) இந்தியாவில் உள்ள பிராமணர்களின் சமூகமாகும். விந்திய மலைத்தொடருக்கு வடக்கே வசிக்கும் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் இவர்களும் ஒருவர்.[1][2]
Remove ads
மக்கள்தொகை
கௌர் பிராமணர்கள் வட இந்தியாவின் மேற்கில், குறிப்பாக அரியானா, இராசத்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனாலும் இந்தியாவின் பிற வட மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.[3]
இவர்கள், தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இது ஜாட்டுகள் மற்றும் குஜ்ஜர்களின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும். இவர்கள் பிராந்தியத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.[4][5]
Remove ads
இராணுவம்
முதலாம் உலகப் போரின் போது, இவர்கள் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் படைப்பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, குறிப்பாக 1 வது பிராமணர்கள் மற்றும் 3 வது பிராமணர்கள் அணியில் நியமிக்கப்பட்டனர்.[6]
சமூக அந்தஸ்து
கௌட பிராமணர்கள் வசிக்கும் இடங்களில், இவர்கள் பிராமணர்களில் மிக உயர்ந்த வகுப்பினராகக் கருதப்படுகிறார்கள்.[7]
குறிப்பிடத்தக்க நபர்கள்
- பாய் அல்மாஸ்ட்-16ஆம் நூற்றாண்டின் மதத் தலைவர்.[8][9]
- பாய் பாலு ஹஸ்னா-16ஆம் நூற்றாண்டின் மதத் தலைவர் [10]
- குஷால் சிங் ஜமாதர்-19ஆம் நூற்றாண்டின் இராணுவ மற்றும் நிர்வாக அதிகாரி [11][12]
- தேஜ் சிங்-19ஆம் நூற்றாண்டின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்.[13]
- மதன் மோகன் மாளவியா-கல்வியாளர் மற்றும் இந்திய சுதந்திர ஆர்வலர்.[14]
- இலட்சுமி சந்த்-கவிஞர், அரியான்வி சாங் கலாச்சாரத்தின் நிறுவனர்.[15]
- ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் முதல் பிரதமர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இந்திய போராட்டத்தில் பங்கேற்றவர். இந்தியாவின் தலை சிறந்த அரசியல் தலைவர் ஆகும்.
- இந்திரா காந்தி - இந்தியாவின் நான்காவது பிரதமர் மற்றும் நேருவின் மகள் இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் ஆவார்.
- இராஜீவ் காந்தி - இந்தியாவின் ஏழாவது பிரதமர் நேருவின் பேரன் ஆவார்.
- சோனியா காந்தி - இவர் பிறப்பால் இட்டாலி நாட்டை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர் மதத்தை சார்ந்தவர் என்றாலும் ராஜீவ் காந்தியை மணந்து கொண்ட பிறகு நேரு–காந்தி குடும்பத்தின் இந்து மதம் சம்பிரதாயங்களை ஏற்று கொண்டு தனது கணவர் இராஜீவ் காந்தி வழியிலே தானும் தனது இரண்டு பிள்ளைகளையும் கௌர் பிராமணர் ஆக்கினார். பின்பு இவர் 1991 முதல் தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அதிகாரங்களை தீர்மானிக்கும் தலைவியாகயும், நேரடியாக அரசியல் பதவிகளில் ஈடுபடாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
- ராகுல் காந்தி - இவர் ராஜீவ் காந்தி–சோனியா காந்தி அவர்களின் முதல் மகன் ஆவார் இவர் தற்போது காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பேற்றும் இரண்டு முறை மக்களவை உறுப்பினர் ஆக திகழ்ந்துவருகிறார்.
- பிரியங்கா காந்தி - இவர் தற்போது அன்னை சோனியா காந்தி மற்றும் அண்ணன் ராகுல்காந்தி போல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads