க. துரைரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதிர்ப்பிள்ளை துரைரத்தினம் (Kathiripillai Thurairatnam, 10 ஆகத்து 1930 - 23 செப்டம்பர் 1995) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
துரைரத்தினம் யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார்.[1] எழுதுவினைஞராகத் தனது 17வது அகவையில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று[1] 1960 வரையில் புலோலி இந்து ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார்.[1]
Remove ads
அரசியலில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஆரம்பித்த காலத்திலேயே துரைரத்தினம் அக்கட்சியில் இணைந்து, போராட்டங்களில் கலந்துகொண்டார். 1956 தேர்தலில் அக்கட்சியின் சார்பில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.[2] எனினும் 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் சூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6]
1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நிறுவினர். 1977 தேர்தலில் துரைரத்தினம் கூட்டணி சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் கே. துரைரத்தினம் பருத்தித்துறை தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[8].
Remove ads
பிற்கால வாழ்க்கை
1983 இற்குப் பின்னர் துரைரத்தினம் தொண்டைமனாற்றில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகன் கமல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராளியானார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலய இராணுவ முகாம் மீதான தற்கொலைத் தாக்குதலில் மேஜர் கமல் இறந்தார். துரைரத்தினத்தின் மகளும் போராளியாக இறந்தார்.
1987 வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையில், துரைரத்தினத்தின் வீடு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் இடம்பெயர்ந்து அகதி முகாமில் தங்கியிருந்தார். இறுதிக்காலத்தில் ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்த துரைரத்தினம் தனது 65-வது அகவையில் வயதில் 1995 செப்டெம்பர் 23 இல் காலமானார்.
கெருடாவில் கிராமத்தில் உள்ள வீதி ஒன்று இவரது பெயரால் "துரைரத்தினம் எம்பி ஒழுங்கை" என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads