க. பஞ்சாங்கம்

தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஆவார் From Wikipedia, the free encyclopedia

Remove ads

க. பஞ்சாங்கம் அல்லது பஞ்சு என்ற புனைப்பெயரால் அறியப்படும் கனியப்பன் பஞ்சாங்கம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1949) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். கவிதை, புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பன்முக ஆளுமை கொண்ட இவர் 51 நூல்களை எழுதியுள்ளார்.[1]

விரைவான உண்மைகள் க. பஞ்சாங்கம், தலைவர், பாரதி அன்பர்கள் அறக்கட்டளை ...
Remove ads

தொடக்க வாழ்க்கை

தற்போதைய விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தை அடுத்துள்ள புத்தூரில் 4 பிப்ரவரி 1949 அன்று முத்தம்மாள்-கனியப்பன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் பஞ்சாங்கம். தந்தையை இளம் அகவையில் இழந்தபின் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.[2]

கல்வி

தொடக்கக் கல்வியை புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையிலும், உயர்கல்வியை தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின் விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை (1965-66) நிறைவு செய்தார்.

1970 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், 1972 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஔவை துரைசாமி, சுப.அண்ணாமலை, மெ.சுந்தரம், ந. சஞ்சீவி உள்ளிட்ட அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக இருந்தனர்.

1983 இல் முனைவர் ஔவை நடராசன் மேற்பார்வையில் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற ஆய்வை மேற்கொண்டு 1988 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

Remove ads

பேராசிரியப் பணி

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உரையாளர் பணியில் 1972 இல் இணைந்தார்.

1973 இல் புதுவை அரசுப் பணியில் சேர்ந்து முதலாவதாக அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றினார். 1977 இல் தாகூர் கலைக் கல்லூரிக்குப் பணிமாறுதல் பெற்றார். 1988 முதல் 1991 வரை மீண்டும் காரைக்கால் கல்லூரியில் பணியாற்றினார்.

1991 முதல் 1993 வரை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், 1993 முதல் 2011 வரை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு மையத்தில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியப்பணி

‘ஒட்டுப்புல்’ என்னும் கவிதைத்தொகுப்போடு தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவர் கவிதை, நாவல், திறனாய்வு, பெண்ணியம், தலித்தியம் முதலிய சமூக அரசியல் மற்றும் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு, கோட்பாட்டு மூல நூல்களின் மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமையாக வளர்ந்தார். 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காத்திரமான நூல்களை எழுதியவர். தன்னுடைய மாணவர்களை நவீனத் திறனாய்வு முறைமைகளில் ஈடுபடுத்தியவர். "வாழ்க்கை ஒரு பெரும்புனைவு என்றும் புதிர்த்தன்மையோடு ஓடிக்கொண்டிருக்கும் பேராறு...அதன் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் தொடர்ந்து கூறிவரும் பேராசிரியர் க.பஞ்சாங்கம், தனது ஆய்வுகளின் மூலம் அவற்றை நிரூபித்தார். கோட்பாட்டு ஆய்வுமுறைகளைப் பற்றிய இவரது கருத்தாக்கங்களைக் கட்டமைப்பதில் வாழ்க்கை பற்றிய இந்த அடிப்படைப் புரிதல்களே இவருக்குப் பெரிதும் உதவுகின்றன. இலக்கியம் போலவே திறனாய்வு என்பதும் ஒரு அரசியல் செயல்பாடு என்பதைப் புரிந்துகொண்டதால், படைப்பாளிகள் எப்போதுமே ஒடுக்கப்படவர்கள் பக்கமே இருக்க வேண்டும், அவர்கள் சார்பாக ஒரு இலக்கியப் பிரதியை அணுகித் தெளிவுபெற முடியும் என்பதைத் தனது திறனாய்வுகளின் வழியே நிரூபித்துவந்தார்.[3] [1]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
Remove ads

பதவிகள்

சாகித்திய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராக 2003-2007 காலகட்டத்தில் பதவி வகித்தார். புதுச்சேரியிலுள்ள பாரதி அன்பர்கள் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.[4] , .

க.பஞ்சாங்கம் பற்றிய நூல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

விருதுகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...
Remove ads

தனி வாழ்க்கை

1979-இல் பிரபாவதி என்பவரை மணந்தார் பஞ்சாங்கம். இவர்களுக்கு அன்புச்செல்வன், பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads