சகாயா எல்ஆர்டி நிலையம்
மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்கு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகாயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cahaya LRT Station; மலாய்: Stesen LRT Cahaya; சீனம்: 丽阳站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமான் சகாயா (Taman Cahaya) எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் சகாயா சாலை, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.
Remove ads
பொது
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த சகாயா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த சகாயா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையம் அண்டை நிலையமான செம்பாக்கா நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
செம்பாக்கா நிலையம்
இந்த நிலையத்திற்கு முந்தைய நிலையம் செம்பாக்கா எல்ஆர்டி நிலையம்; அந்த செம்பாக்கா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் இந்த செம்பாக்கா நிலையம் கொண்டுள்ளது.
செம்பாக்கா நிலையத்திற்கு அருகில் தாமான் சகாயா (Taman Cahaya), தாமான் சகாயா இண்டா (Taman Cahaya Indah), தாமான் நிர்வாணா (Taman Nirvana), கம்போங் பாரு அம்பாங் (Kampung Baru Ampang) ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.[3]
Remove ads
அம்பாங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[4]
Remove ads
காட்சியகம்
செம்பாக்கா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2007)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads