பிரசரானா மலேசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரசரானா மலேசியா (ஆங்கிலம்: Prasarana அல்லது Malaysian Infrastructure Limited; மலாய்: Prasarana Malaysia Berhad) என்பது மலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் மலேசிய அரசாங்கம் 100% பங்குகளைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர் நகரின் பொது போக்குவரத்து அமைப்பை மறுசீரமைப்பதற்கான அரசாங்க நடவடிக்கையின் கீழ் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.[1]
மலேசிய நிதி அமைச்சு (ஒருங்கிணைத்தல்) சட்டம் 1957-இன் (Minister of Finance Incorporation Act 1957) கீழ் ஒரு நிறுவன அமைப்பாக தொடங்கப்பட்டது. தற்போதைய நிலையில் பிரசரானா மலேசியா, மலேசியாவில் பல வகையான பொது போக்குவரத்துச் சேவைகளை நடத்தி வருகிறது.[2]
Remove ads
பொது
மலேசியாவில் மிகப்பெரிய பொது போக்குவரத்து நிறுவனங்களில் பிரசரானா மலேசியா நிறுவனமும் ஒன்றாகும். மற்ற பெரிய போக்குவரத்து நிறுவனம் டிரான்சுநேசனல் குழுமம் (Konsortium Transnasional) ஆகும். அது தனியார் நிறுவனம். பிரசரானா மலேசியா நிறுவனம் பேருந்து மற்றும் பெருநகர் இலகு சேவைகளை (Light Metro Services) நடத்தி வருகிறது.[3]
நிலையப் பெயரிடும் உரிமைகள் திட்டம்
விளம்பரம் மற்றும் கட்டண வசூலைத் தாண்டிய நிலையில் தன்னுடைய வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக, பிரசாரனா மலேசியா ஒரு புதிய நிலையப் பெயரிடும் உரிமைகள் திட்டத்தை (Station naming rights program) (அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ் மலேசிய நிறுவனங்கள், பிரசாரனாவுக்குச் சொந்தமான எந்தவொரு நிலையத்தையும் மறுபெயரிட வாய்ப்பு வழங்கப்பட்டது.[4] ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம், பிரசாரனா மலேசியாவின் தொடருந்து நிலையங்களின் பெயரில் தன் நிறுவனப் பெயரையும் இணைத்து, நிலையத்திற்கு மறுபெயரிடலாம்.
பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும்; வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும்; நிலையங்களை மறுபெயரிடுதல் திட்டம் செயல்படுகிறது. இருப்பினும் நிலையத்தின் அசல் பெயர் தக்க வைக்கப்படும்.[5][6]
துணை நிறுவனங்கள்
பிரசரானா மலேசியாவின் நான்கு நிறுவனங்கள்;–
- ரேபிட் கேஎல் (Rapid Rail)
- ரேபிட் பேருந்து (Rapid Bus)
- பிரசரானா ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் பொறியியல் சேவைகள் நிறுவனம் (Prasarana * Integrated Management and Engineering Services Sdn Bhd) (PRIME)
- ஒருங்கிணைந்த வளர்ச்சி நிறுவனம் (Prasarana Integrated Development Sdn Bhd) (PRIDE)[7]
சேவைகள்
- ரேபிட் கேஎல் தொடருந்துகள் - Rapid Rail Sdn Bhd
- ரேபிட் கேஎல் பேருந்துகள் - Rapid Bus Sdn Bhd
- ரேபிட் பினாங்கு பேருந்துகள் - Rapid Bus Sdn Bhd
- ரேபிட் குவாந்தான் பேருந்துகள் - Rapid Bus Sdn Bhd
- தொட்டு செல் - Touch 'n Go Card
- முத்தியாரா அட்டை - ரேபிட் பினாங்கு Mutiara Pass Rapid Penang[8]
Remove ads
காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads