மலூரி நிலையம்
இலகுரக விரைவுப் போக்குவரத்து; மற்றும் பெரும் விரைவுப் போக்குவரத்து நிலையம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலூரி நிலையம் (ஆங்கிலம்: Maluri Station; மலாய்: Stesen Maluri; சீனம்: 馬魯里站) என்பது மலேசியா, கோலாலம்பூர் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT); மற்றும் பெரும் விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள தாமான் மலூரி (Maluri Garden) எனும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், காஜாங் வழித்தடம், ஆகிய 2 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.
இந்த நிலையம் மலேசிய கூட்டரசு சாலை 1; மற்றும் செராஸ் சாலை (Cheras Road) ஆகிய சாலைகளின் வழிப்பகுதியில் அமைந்துள்ளது
Remove ads
அமைவு
பிரித்தானிய காலனித்துவக் காலத்திலும்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகள் வரையிலும்; இன்றைய மாலுரி நிலையத்தின் தளம், கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து அமைப்பின் புடோ உலு நிறுத்தம் (Pudoh Ulu Halt) அல்லது புடு உலு நிறுத்தம் (Pudu Ulu Halt) என அழைக்கப்பட்டது.
முன்னர் இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) என அழைக்கப்பட்ட அம்பாங் வழித்தடம் 1996-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது; மற்றும் 17 சூலை 2017 அன்று திறக்கப்பட்ட
காஜாங் வழித்தடத்தின் மூலம் இந்த நிலையம் சேவையாற்றுகிறது. இந்த உயர்த்தப்பட்ட மற்றும் நிலத்தடி நிலையம்; நிலையங்களுக்கு இடையிலான கட்டண ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது.
எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) வழங்கப்பட்ட பெயரிடும் உரிமையின் கீழ், மலூரி எம்ஆர்டி நிலையம் தற்போது ஏயோன்-மலூரி எம்ஆர்டி நிலையம் (AEON-Maluri MRT) என அழைக்கப்படுகிறது.[2][3]
Remove ads
அம்பாங் வழித்தடச் சேவை
பழைய உயர்த்தப்பட்ட மலூரி நிலையம், அம்பாங் வழித்தடத்திற்குச் சேவை செய்கிறது.
பழைய மலூரி நிலையம், கட்டண வாயில்கள் அமைந்துள்ள தரைநிலை மட்டத்திற்கும் மேலே உள்ளது; மற்றும் உயரமான இரண்டு பக்க மேடைகளையும் கொண்டுள்ளது. இரண்டு மேடைகளையும் தரைநிலை மட்டத்திலிருந்து படிக்கட்டுகள் மற்றும் சுழலும் படிக்கட்டுகள் வழியாக அடையலாம். முன்னதாக, சுமைதூக்கிகள் எதுவும் இல்லை. இருப்பினும், 2015-இல் அந்தக் குறைகள் தீர்க்கப்பட்டன..
Remove ads
பேருந்து சேவைகள்
காட்சியகம்
மலூரி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads