சகோத்ரபாய் ராய்
2ஆவது மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகோத்ரபாய் தேவி ராய் (Sahodrabai Rai)(30 ஏப்ரல் 1919 - 26 மார்ச் 1981) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
Remove ads
வாழ்க்கை மற்றும் தொழில்
சாகர் மக்களவைத் தொகுதியிலிருந்து சகோத்ரபாய் தேவி ராய் 1957ஆம் ஆண்டு இந்தியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். ராய் இந்தியாவின் 1971 மற்றும் 1980 பொதுத் தேர்தல்களிலும், சாகர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் 2வது, 5வது மற்றும் 7வது மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தாமோவிலிருந்து 3வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1]
ராய் நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பணியாற்றினார். 1945-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சத்தியாகிரகத்தில் ("உண்மையை வலியுறுத்துதல்" என்று தளர்வாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) பங்கேற்றார். இவரும் 1979-ல் இந்திரா காந்தியுடன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.[2][3]
Remove ads
இறப்பு
சகோத்ரபாய் தேவி ராய் மார்ச் 1981-ல் தனது 61 வயதில் இறந்தார்.[4][5]
மேலும் பார்க்கவும்
- மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads