சக்சஸ்

2003 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சக்சஸ் என்பது சுரேஷ் பிரசன்னா எழுதி இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் புதுமுகம் துஷ்யந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். சோனியா அகர்வால் மற்றும் நந்தனா துணை வேடங்களில் நடித்தனர். படம் 2003 செப்டம்பரில் விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்று வெளியானது.[1][2]

விரைவான உண்மைகள் சக்சஸ், இயக்கம் ...
Remove ads

நடிப்பு

தயாரிப்பு

தயாரிப்பாளர் இசக்கி சுந்தர் சிவாஜி புரொடக்சன்சு அலுவலகத்தில் இராம்குமார் கணேசனின் மகனும், சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்தைப் பார்த்து, அவருக்கு அறிமுக வாய்ப்பை வழங்கினார். ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்த, அவர் இறுதியில் அவரது சித்தப்பா பிரபு, உறவினர் விக்ரம் பிரபு ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு ஒப்புக்கொண்டார்.[3] படத்தின் தயாரிப்பின் போது துஷ்யந்த் ஜூனியர் சிவாஜியாகவும் பாராட்டப்பட்டார். பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜியின் முதல் திரை உரையாடலான சக்சஸ் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டது.[4][5]

Remove ads

வெளியீடு

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது "திரைப்படம் ஒரு திருப்பத்துடன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இது நிச்சயமாக உற்சாகப்படுத்துவதாகவும், ஆர்வத்தைத் தருவதாகவும் உள்ளது. இதற்குப் பிறகு முதல் பாதியைத் திரும்பிப் பார்க்கும்போது, திரைப்படத்தில் உண்மையில் நல்ல கதா பாத்திரங்களை அமைப்பதில் மிகுந்த புத்திசாலித்தனமாக இருந்ததை உணரமுடிகிறது. ஆனால் சற்று வித்தியாசமான முறையிலான திருப்பம் வியக்க வைக்கிறது. " [6] மற்றொரு விமர்சகர் "சக்சஸ் படமானது ஜூனியர் கணேசன் வெற்றிபெற சரியான படம் அல்ல" என்று குறிப்பிட்டார்.[7]

இசை

வாலி, கபிலன், சினேகன், விவேகா ஆகியோரால் பாடல் வரிகள் எழுதப்பட, தேவா இசையமைத்தார்.[8]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads