சங்கமம் (1970 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கமம் (Sangamam) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] தாதா மிராசியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் சங்கமம், இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

அசோக்கும் சேகரும் உடன்பிறந்தோர். அண்ணன் அசோக் உணவக முதலாளி என்ற போர்வையில் சிங்காரத்துடன் சேர்ந்து கொள்ளையடித்து வசதியாக வாழ்கிறான். இலட்சுமியைக் காதலித்து மணந்து கர்ப்பமானவுடன் கைவிட்டு விடுகிறான். தம்பி சேகர் ராதா தோட்டத்தில் ஓட்டுனராகப் பணியாற்றுகிறான். சேகரும் ராதாவும் காதலிக்கிறார்கள். இதைக்கெடுக்க கங்காணி சுப்பையா முயல்கிறார். ஆனால் ராதாவின் தந்தை காதலுக்கு ஆதரவு தெரிவித்து அண்ணன் அசோக்கை பார்த்துவரும்படி சேகரை சென்னைக்கு அனுப்புகிறார். அசோக்-சிங்காரம் கூட்டணி வங்கியில் கொள்ளயடித்துவிட்டு தப்புகின்றனர். தன்னிடம் பிக் பாக்கெட் செய்த தம்புவைத் துரத்தி செல்லும் சேகரை வங்கிக் கொள்ளையன் என்று சொல்லி காவலர்கள் சிறையில் அடைக்கின்றனர். சேகர் கொள்ளைக்காரன் என நம்பும் ராதா தனது அப்பாவை மிரட்டும் அசோக்கிடம் இருந்து காப்பாற்ற அவனை மணந்துகொள்ளச் சம்மதிக்கிறாள்.

சிறையிலிருந்து தப்பிய சேகர் அண்ணன் அசோக் வீடு சென்று உதவி கேட்கிறான். அவனும் சரியென்று சொல்லிவிட்டு மறைவாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறான். அப்போது ஏற்படும் கைகலப்பில் போதையிலிருந்த அசோக் மயங்கி விழுந்து விடுகிறான். அவன் இறந்து விட்டதாக எண்ணி வருந்தும் சேகர் காவல்துறையினரிடம் அசோக் ஆக நடிக்க ஆரம்பிக்கிறான். முதலுதவி வண்டியில் கொண்டு செல்லப்படும் அசோக்கின் உடலை சிங்காரம் கடத்துகிறான். மயக்கம் தெளிந்த அசோக் சேகராகவே நடித்து தன்னைக் கொன்றுவிட்டு தனது இடத்தில் தனது தம்பி சேகரை வைக்க முயலும் சிங்காரத்தின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கிறான். அசோக் ஆக நடிக்கும் சேகருக்கும் உண்மை தெரியாத ராதாவுக்கும் திருமணம் முடிகிறது. இதற்கிடையில் அசோக்கின் மனைவி இலட்சுமி தனது மகனுடன் சென்னை வந்து தனது கணவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான் என்று நினைத்து வருந்துகிறாள். அங்கேயே வேலைக்காரியாகத் தங்குகிறாள்.

சிங்காரத்தின் மிரட்டல் கடிதத்தால் ராதாவின் தந்தை மரணமடைந்த செய்தி கேட்டு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு ராதா பேச்சை இழக்கிறாள். சில்லறைத் திருடனும் சேகரை அறிந்தவனுமான தம்புவின் உதவியால் அசோக் சிங்காரத்திடமிருந்து தப்புகிறான். கணவனைக் கைது செய்ய காவல்துறையினர் வந்த அதிர்ச்சியில் ராதாவுக்கு பேச்சு வந்து விடுகிறது. அனைவரும் இணைகின்றனர்.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

டி. கே. ராமமூர்த்தி இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர்(கள்) ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads