டி. கே. ராமமூர்த்தி
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் (1922-2013) From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி (Trichirappalli Krishnasamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளரும் வயலின் கலைஞரும் ஆவார். இவரும் எம். எஸ். விஸ்வநாதனும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1950/1960 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
Remove ads
இசையமைத்த திரைப்படங்கள்
19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
- சாது மிரண்டால்
- தேன் மழை
- மறக்க முடியுமா
- நான்
- மூன்றெழுத்து
- தங்கச் சுரங்கம்
- காதல் ஜோதி
- ஆலயம்
- சோப்பு சீப்பு கண்ணாடி
- சங்கமம்
- சக்தி லீலை
- அவளுக்கு ஆயிரம் கண்கள்
எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
விரிவான தரவுகளுக்கு -
Remove ads
மறைவு
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் நாள் காலமானார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads