சச்சித்திர சேனநாயக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சச்சித்திர சேனநாயக்கா (Sachithra Senanayake, பிறப்பு: 9 பெப்ரவரி 1985) இலங்கைத் துடுப்பாட்ட வீரர். பல்-துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை துடுப்பாட்டக்காரரும், வலக்கை விலகுசுழல் பந்து வீச்சாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு முதல் இவர் கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழகத்திற்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு பற்றி வருகிறார்.[1]
சேனநாயக்கா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சார்பில் முதற் தடவையாக பன்னாட்டுப் போட்டி ஒன்றில் 2012 சனவரியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இலங்கையின் நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். இலங்கைப் பிரீமியர் இலீகு மட்டுப்படுத்த்கப்பட்ட ஒவர் போட்டிகளில் பங்கு பற்றி அதிக எண்ணிக்கையான இலக்குகளைக் கைப்பற்றியமைக்காக இவர் இலங்கை அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.[1] 2013 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் 625,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டார்.
Remove ads
பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தடை
2014 சூன் மாதத்தில் நடைபெற்ற இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் சச்சித்திர சேனநாயக்கா பந்தை வீசி எறிவதாக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிட்டனர்.[2] அவர் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த சந்தேகத்திற்கிடமான நான்கு பந்துவீச்சுக்களின்போது, முழங்கை மூட்டு விரியவேண்டிய 15-பாகை அளவையும் தாண்டி விரிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் அவர் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads