சண்டக்கான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சண்டக்கான் என்பது (மலாய்: Sandakan; ஆங்கிலம்: Sandakan; சீனம்: 山打根; ஜாவி: سنداکن) மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, சண்டக்கான் மாவட்டத்தின் தலைநகரம். முன்பு எலோபுரா (Elopura) என்று பல்வேறு காலங்களில் அறியப்பட்டது.[1]
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகிறது. வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.[2]
Remove ads
பொது
இந்நகரம் தீவின் கிழக்கு கடற்கரையுடன் அமைந்துள்ளதுடன், சண்டக்கான் பிரிவின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்நகரம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் தலைநகராக இருந்தது. சண்டக்கான் சபாவின் சூழலியல் சுற்றுலாவின் முக்கிய நுழைவாயிலாக உள்ளது.
இங்குள்ள செபிலாக் ஓராங் ஊத்தான் மறுவாழ்வு மையம் (Sepilok Orang Utan Sanctuary); மழைக்காடு டிஸ்கவரி மையம்; ஆமை தீவுப் பூங்கா (Turtle Islands National Park); கினாபாத்தாங்கான் ஆறு மற்றும் கோமந்தோங் குகைகள் குறிப்பிடத் தக்கவை.
சண்டக்கான் வானூர்தி நிலையம்
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் பயன்படுத்திய விமானத்தளம் தற்போது சண்டாக்கான் வானூர்தி நிலையமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த விமானத் தளம் 6000 கட்டாய தொழிலாளர்கள்; ஜாவா தீவு குடியானவர்கள் மற்றும் கூட்டணி நாடுகளின் போர்க் கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது.
எஞ்சிய ஆஸ்திரேலியக் கைதிகள், 1945-ஆம் ஆண்டில், சண்டாக்கான் விமானத் தளக் கட்டுமானத்திற்கு அனுப்பப் பட்டனர் அவர்களில் 6 பேர் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர்.[3]
Remove ads
வரலாறு
சண்டாக்கான் நிறுவப் படுவதற்கு முன்பு, அந்தப் பகுதியின் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் ஸ்பெயின் நாடும் சூலு சுல்தானகமும் ஈடுபட்டு வந்தன.
1864-ஆம் ஆண்டில், சூலு தீவுக் கூட்டத்தில் (Sulu Archipelago) இருந்த சுலு சுல்தானக உடைமைகளை ஸ்பெயின் முற்றுகையிட்டது. அதன் காரணமாக ஜெர்மனியின் பாதுகாப்பை சூலு பெற விரும்பியது.
அந்த வகையில் அப்போது அங்கு இருந்த ஜெர்மன் தூதரகச் சேவையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு சண்டாக்கான் விரிகுடாவில் ஒரு நிலத்தை சூலு சுல்தானகம் வழங்கியது.
ஜெர்மனியின் தலையீடுகள்
1878-ஆம் ஆண்டில், சூலு சுல்தானகம், வடகிழக்கு போர்னியோவை ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய (Austro-Hungarian) தூதர் ஒருவருக்கு விற்றது. பின்னர் அந்த வடகிழக்கு போர்னியோ பகுதி ஜெர்மானிய வணிகர் ஒருவரிடம் கைமாறியது.
இந்தப் பகுதியில் ஜெர்மனியின் தலையீடுகள் பிரித்தானியருக்குக் கவலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, சுலு தீவுக் கூட்டத்தின் மீது ஸ்பானிய இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக பிரிட்டன், ஜெர்மன் மற்றும் ஸ்பானியா நாடுகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பெயர் 1885 மெட்ரிட் ஒப்பந்தம் (Madrid Protocol of 1885).[4]
பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம்
1879-ஆம் ஆண்டில் பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம் (British North Borneo Company (BNBC), சண்டக்கானில் ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்கத் தொடங்கியது. அதன் பின்னர் சண்டக்கான் செழிக்கத் தொடங்கியது. ஒரு வணிக வர்த்தக மையமாக மாறியது.
மற்றும் வடக்கு போர்னியோவின் முக்கிய நிர்வாக மையமாகவும் மாறியது. சண்டக்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரித்தானிய ஹாங்காங்கில் இருந்து சீனர்கள் இடம்பெயர்வதையும் ஆங்கிலேயர்கள் ஊக்குவித்தனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் ஆதிக்கம்
மற்றும் வடக்கு போர்னியோவின் முக்கிய நிர்வாக மையமாகவும் மாறியது. சண்டக்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரித்தானிய ஹாங்காங்கில் இருந்து சீனர்கள் இடம்பெயர்வதையும் ஆங்கிலேயர்கள் ஊக்குவித்தனர்.
இருப்பினும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்த போது சண்டக்கானின் வளர்ச்சி தடைப்பட்டது. போரினால் நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. புனரமைப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், வடக்கு போர்னியோவின் நிர்வாக அதிகாரங்கள் இங்கிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டன.
அதைத் தொடர்ந்து, வடக்கு போர்னியோவின் நிர்வாகத் தலைநகரம் ஜெசல்டன் (Jesselton) நகருக்கு மாற்றப்பட்டது. 1948 - 1955-ஆம் ஆண்டுகளின் காலனித்துவ அதிகாரப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் சண்டக்கானில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தொடங்கியது.
Remove ads
காலநிலை
சண்டக்கான் வெப்பமண்டல மழைக்காட்டு தட்ப வெப்பத்தைக் கொண்டுள்ளதாக கோப்பன் காலநிலை வகைப்பாடு தெரிவிக்கிறது. இந்த நகரம் ஆண்டு முழுவதும் மழை பொழியும் இடமாக உள்ளது. அதிகபட்ச மழைப்பொழிவு நவம்பரில் இருந்து சனவரி வரை. அதிகப்பட்ச வெயில் 31 பாகை செல்சியசாகவும் குறைந்தபட்ச அளவு 24 பாகையாகவும் உள்ளது. சண்டாக்கானில் வருடத்திற்கு சராசரியாக 3100 மி.மீ. அளவு மழை பொழிகிறது.
Remove ads
காட்சியகம்
- சண்டக்கான் நகரத்தின் வான்வழி காட்சி
- சண்டக்காகன் நினைவு பூங்கா நினைவுச்சின்னம்
- மலேசியாவில் மிகப் பழமையான கருங்கல் தேவாலயம் (செயின்ட் மைக்கேல்ஸ் தேவாலயம்)
- பண்டார் இண்டா ஜெயா புறநகர்ப் பகுதியில் துணை நகரம்
- சண்டக்கான் நகர மையத்தின் ஒரு காட்சி
- நியூலேண்ட்ஸ், ஆக்னஸ் நியூட்டன் கீத் மற்றும் ஹாரி கீத் ஆகியோரின் வீடு.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads