சண்டக்கான் மாவட்டம்

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சண்டக்கான் மாவட்டம்map
Remove ads

சண்டக்கான் மாவட்டம்; (மலாய்: Daerah Sandakan; ஆங்கிலம்: Sandakan District) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் (Sandakan Division) உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் சண்டக்கான் (Sandakan Town) நகரம். இந்த நகரம் மலேசியாவின் துறைமுக நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

விரைவான உண்மைகள் சண்டக்கான் மாவட்டம் Sandakan DistrictDaerah Sandakan, நாடு ...

சபாவின் கிழக்குக் கடற்கரையில் சுலு கடல் (Sulu Sea) உள்ளது. அதை எதிர்நோக்கியவாறு அமைந்துள்ள இந்த மாவட்டம், இதர மாவட்டங்களான பெலுரான் மாவட்டம் (Beluran District), கினபாத்தாங்கான் மாவட்டம் (Kinabatangan District) ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.[1]

Remove ads

பொது

இந்த மாவட்டம், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1,900 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் மலேசியா-பிலிப்பீன்சு எல்லை (Malaysia–Philippines Border), இந்த மாவட்டத்தின் கிழக்கே 28 கி.மீ. தொலைவில்; மிக அருகாமையில் உள்ளது.

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து தென் கிழக்கே, ஏறக்குறைய 319 கி.மீ. தொலைவிலும்; வடமேற்கே கினபாத்தாங்கான் நகரத்தில் இருந்து 77 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Thumb
சண்டக்கான் மாவட்டத்தின் வரைபடம்

சபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

Remove ads

சண்டக்கான் நகரம்

சண்டக்கான் நகரம், முன்பு காலத்தில் எலுபுரம் (Elopura) என்று அறியப்பட்டது. இது சபாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். முந்தைய நாட்களில், ஆங்காங்கில் இருந்து அதிக அளவு சீனர்கள் குடியேறியதால், சபாவின் 'லிட்டில் ஆங்காங்' (Little Hong-Kong) என்றும் சண்டக்கான் அறியப்பட்டது.[2]

சுற்றுலா இடங்கள்

சண்டக்கான நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகிறது. வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் (ஆங்கிலம்: North Borneo அல்லது British North Borneo) தலைநகராகவும் இருந்தது. [3]

முக்கியமான இடங்கள்

  • சண்டக்கான் பாரம்பரிய அருங்காட்சியகம் - (Sandakan Heritage Museum)
  • சண்டக்கான் கலாசார விழா - (Sandakan Cultural Festival)
  • சண்டக்கான் போர் நினைவுச் சின்னம் - (Sandakan War Memorial)
  • செபிலாக் ஓராங் ஊத்தான் மறுவாழ்வு மையம் - (Sepilok Orang Utan Sanctuary)
  • மழைக்காடு டிஸ்கவரி மையம் - (Rainforest Discovery Centre)
  • ஆமை தீவுப் பூங்கா - (Turtle Islands National Park)
  • கினபாத்தாங்கான் ஆறு - (Kinabatangan River)
  • கோமந்தோங் குகைகள் - (Gomantong Caves)

சண்டக்கான் மரண அணிவகுப்பு

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் பயன்படுத்திய விமானத்தளம் தற்போது சண்டக்கான் வானூர்தி நிலையமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமானத் தளம் 6000 கட்டாய தொழிலாளர்கள்; ஜாவா தீவு குடியானவர்கள் மற்றும் கூட்டணி நாடுகளின் போர்க் கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது.

எஞ்சிய ஆஸ்திரேலியக் கைதிகள், 1945-ஆம் ஆண்டில், சண்டக்கான் விமானத் தளக் கட்டுமானத்திற்கு அனுப்பப் பட்டனர் அவர்களில் 6 பேர் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர்.[4]

Remove ads

சூலு சுல்தானகம்

சண்டக்கான் நிறுவப் படுவதற்கு முன்பு, சண்டக்கான் பகுதியின் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் ஸ்பெயின் நாடும் சூலு சுல்தானகமும் ஈடுபட்டு வந்தன. 1864-ஆம் ஆண்டில், சூலு தீவுக் கூட்டத்தில் (Sulu Archipelago) இருந்த சூலு சுல்தானகத்தின் உடைமைகளை எசுப்பானியா முற்றுகையிட்டது.

அதன் காரணமாக ஜெர்மனியின் பாதுகாப்பைச் சூலு சுல்தானகம் பெற விரும்பியது. அந்த வகையில் அப்போது அங்கு இருந்த ஜெர்மன் தூதரகச் சேவையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு சண்டக்கான் விரிகுடாவில் ஒரு நிலத்தை சூலு சுல்தானகம் வழங்கியது.

ஜெர்மனியின் தலையீடுகள்

1878-ஆம் ஆண்டில், சூலு சுல்தானகம், வடகிழக்கு போர்னியோவை ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய (Austro-Hungarian) தூதர் ஒருவருக்கு விற்றது. பின்னர் அந்த வடகிழக்கு போர்னியோ பகுதி ஜெர்மானிய வணிகர் ஒருவரிடம் கைமாறியது.

கிழக்கு போர்னியோ பகுதியில் ஜெர்மனியின் தலையீடுகள் பிரித்தானியருக்குக் கவலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, சுலு தீவுக் கூட்டத்தின் மீது எசுப்பானிய இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக பிரிட்டன், ஜெர்மன் மற்றும் எசுப்பானியா நாடுகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பெயர் 1885 மெட்ரிட் ஒப்பந்தம் (Madrid Protocol of 1885).[5]

பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம்

1879-ஆம் ஆண்டில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company (BNBC), சண்டக்கானில் ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்கத் தொடங்கியது. அதன் பின்னர் சண்டக்கான் செழிக்கத் தொடங்கியது. ஒரு வணிக வர்த்தக மையமாக மாறியது.

மற்றும் வடக்கு போர்னியோவின் முக்கிய நிர்வாக மையமாகவும் மாறியது. சண்டக்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரித்தானிய ஆங்காங்கில் இருந்து சீனர்கள் இடம்பெயர்வதையும் ஆங்கிலேயர்கள் ஊக்குவித்தனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் ஆதிக்கம்

மற்றும் வடக்கு போர்னியோவின் முக்கிய நிர்வாக மையமாகவும் மாறியது. சண்டக்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரித்தானிய ஆங்காங்கில் இருந்து சீனர்கள் இடம்பெயர்வதையும் பிரித்தானியர்கள் ஊக்குவித்தனர்.

இருப்பினும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்த போது சண்டக்கானின் வளர்ச்சி தடைப்பட்டது. போரினால் நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. புனரமைப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், வடக்கு போர்னியோவின் நிர்வாக அதிகாரங்கள் இங்கிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டன. அதைத் தொடர்ந்து, வடக்கு போர்னியோவின் நிர்வாகத் தலைநகரம் ஜெசல்டன் (Jesselton) நகருக்கு மாற்றப்பட்டது.

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

மேலும் காண்க

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads