சதுரங்கப்பட்டினம்

From Wikipedia, the free encyclopedia

சதுரங்கப்பட்டினம்map
Remove ads

சதுரங்கப்பட்டினம் தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சென்னைக்குத் தெற்கே 70கிமி தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் இப்பெயரை ஆங்கிலப்படுத்தி சட்ராஸ் என அழைப்பர்.

விரைவான உண்மைகள்
Remove ads

ஒல்லாந்தக் கோட்டை

தற்போதுள்ள இந்தக் கடலோர நகரத்தை, 17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டினர் நிறுவினர். அவர்கள் வணிக நோக்கத்துக்காகப் பெரிய கோட்டை ஒன்றை இங்கே கட்டினர். மிகப் பெரிய தானியக் கிடங்குகள், குதிரை லாயங்கள், யானைகளைக் கட்டுவதற்கான அமைப்புகள் போன்றவை இக்கோட்டைக்குள் இருந்தன. ஆனால் இவற்றுள் ஒன்று மட்டுமே இன்று காணப்படுகிறது. பெரிய மதில்களைக் கொண்டிருந்த இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1818 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றினர்.[1] தற்போது, இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.சதுரங்கப் பட்டினக் கோட்டையில் 1620க்கும் 1769க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளுடன் கூடிய இடுகாடு ஒன்றும் உள்ளது.[2] 2003ம் ஆண்டுக்குப் பின்னர் இக்கோட்டையில் பெரிய அளவில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேலைகள் பல தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் வழி சமைத்தன.[3] விசயநகரப் பேரரசுக் காலத்தில் இங்கே துறைமுகம் ஒன்று இருந்ததற்கான சான்றுகளும் ஆய்வுகளின் ஊடாகக் கிடைத்துள்ளன.[4]

Remove ads

சதுரங்கப்பட்டினப் போர்

சதுரங்கப்பட்டினப் போர் அமெரிக்க விடுதலைப் போரின் போது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அட்மிரல் சர் எட்வர்ட் ஹியூஸ் என்பவரின் கீழான பிரித்தானியக் கப்பற்படைக்கும் பெய்லி டி சப்ரன் என்பவரின் கீழான பிரஞ்சு கடற்படைக்கும் இடையே நடந்தது. பெரும்பாலும் இப்போர் வெற்றி தோல்வியின்றியே முடிந்தபோதும், 17 பிப்ரவரி 1782 அன்று நடைபெற்ற இப்போரில் பிரித்தானியக் கப்பற்படை மிகவும் சேதம் அடைந்தது.

இடம்

சமீப காலங்களில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையம் (மெட்ராஸ் அணு மின் நிலையம்) மற்றும் அணு ஆராய்ச்சி மையம் (இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் - IGCAR) ஆகியவற்றுக்கு அருகாமையில் இருப்பதால் சத்ராஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்ராஸ் கிராமம் மின் உற்பத்தி நிலையத்திற்கும் அதன் நகரத்திற்கும் இடையில் உள்ளது. கல்பாக்கம் மற்றும் சட்ராஸ் இணைக்கும் இரண்டு பாலங்கள் உள்ளன.

காட்சியகம்

சதுரங்கப்பட்டினக் கோட்டையில், பல ஓவியங்களும், அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளும், ஸ்தூபங்களும் உள்ளன.

Thumb
மரபுச் சின்னங்கள் பொருந்திய சமாதி.

References

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads