சத்ரியா நடனம்

From Wikipedia, the free encyclopedia

சத்ரியா நடனம்
Remove ads

சத்ரியா அல்லது சத்ரியா நிருத்தியா; இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தோன்றிய கதைப்பாடல் வடிவ பாரம்பரிய நாட்டிய நாடகமாகும். [1] நாட்டிய நாடகமான சத்ரியா கிருஷ்ணனை மையமாகக் கொண்ட அசாமிய வைஷ்ணவ மடாலயங்களைத் தோற்றுவாயாகக் கொண்டது. 15 ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்க அறிஞரும் துறவியுமான மகாபுருஷ் ஸ்ரீமந்த சங்கரதேவ் இதற்கான காரணமாவார்.[2] [3] [4]

Thumb
ஒரு செவ்வியல் இந்திய நடனமான சத்ரியா, இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தோன்றியது.

சத்ரியாவின் ஒரு நபர் நாடகங்களை அங்கியா நாட் என்று அழைக்கின்றனர், இது மதத்தை நடனம் மற்றும் நாடகம் மூலம் அழகியலுடன் இணைக்கும் ஒரு கதைப்பாடல் வடிவ நாட்டிய நாடகமாகும் . [5] [6] நாடகங்கள் பொதுவாக மடாலயக் கோயில்களின் சத்திரங்கள் எனப்படும் நடன சமூக அரங்குகளில் ( நம்கர்) நிகழ்த்தப்படுகின்றன . [7] இந்நாடகத்தின் கருப்பொருள்கள் கிருஷ்ணர், ராதாவுடன் தொடர்புடையவை, சில நேரங்களில் மற்ற விஷ்ணுஅவதாரங்களான இராமர், சீதை ஆகியோர் கருப்பொருளாக அமைகின்றனர். [8]

2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் சங்கீத நாடக அகாதமியால் செவ்வியல் நடனமாக அங்கீகரிக்கப்பட்ட நவீன சத்ரியா பல கருப்பொருள்கள் மற்றும் நாடகங்களை ஆய்வு செய்து அதன் நிகழ்ச்சிகள் உலகளவில் அரங்கேற்றம் செய்யப படுகின்றன.[9]

Thumb
கேரளாவின் செட்டிக்குளங்கரத்தில் மகாபாரத தத்வாசமீக்ஷத்தில் அன்வேஷா மோகந்தா நிகழ்த்திய சத்ரியா நடனம்
Remove ads

வரலாறு

Thumb
ராம்கிருஷ்ணா தாலுக்தார் எழுதிய சத்ரியா நடனத்தில் ஒரு தோரணை

சத்ரியா என்பது இந்தியாவின் ஒரு செவ்வியல் நடனமாகும். இது இந்தியாவின் பண்டைய நாடகம் மற்றும் இசை நூல்களுக்கு, குறிப்பாக காந்தர்வ வேதம் எனும் நாட்டிய சாத்திரத்தின் வேர்களைக் கண்டுபிடிக்கும் வகைப்பாடு ஆகும். [10] [11] நாட்டிய சாத்திரம் என்பது பண்டைய அறிஞர் பரத முனிவர் எழுதிய நிகழ்த்து கலைகள் பற்றியஅடிப்படைகள் கொண்ட நூலாகும். அதன் முதல் முழுமையான தொகுப்பு கி.பி 200 க்கு கி. மு 200க்கும் இடைப்பட்டதாகும்.[12] [13] ஆனால் மதிப்பீடுகள் கி.பி 500ம் கி.மு 500 க்கும் இடையில் வேறுபடுகின்றன.[14] நாட்டிய சாத்திர உரையின் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட பதிப்பு 36 அத்தியாயங்களாகக் கட்டமைக்கப்பட்ட சுமார் 6000 பாடல்களைக் கொண்டுள்ளது. [12] [15] நடாலியா லிவோடா என்ற இதன் உரை, தாண்டவ( சிவன் ), நடனக் கோட்பாடு, ராச நடனக் கோட்பாடு, பாவம், பாவனை, உடல்மொழி, வெளிப்பாடு, கருத்து, சைகைகள், நடிப்பு நுட்பங்கள், அடிப்படை படிகள், நிற்கும் தோரணைகள் - என இந்திய செவ்வியல் நடனங்களின் பகுதியாக உள்ள இவை அனைத்தையும் பற்றி விளக்குகிறது.[12] [16] நடனம் மற்றும் நிகழ்த்துக் கலைகளானவை, [17] ஆன்மீக கருத்துக்கள், நல்லொழுக்கங்கள் மற்றும் வேதங்களின் சாராம்சத்தின் வெளிப்பாட்டின் ஒரு வடிவம் என இந்த பண்டைய உரை கூறுகிறது. [18]

அசாமில் நடனக் கலைகளின் வரலாறு பழங்காலத்திற்குச் செல்கிறது, இது செப்புத் தகடு, கல்வெட்டுகள், சைவம், சாக்த மரபுகள் ஆகியவை தொடர்பான சிற்பக்கலைகளால் சாட்சியமளிக்கப்படுகிறது. இந்து காவியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் குழுப்பாடல்கள் போலவே அசாமியக் குழுப்பாடல்கள் பாடுதல் மற்றும் இசைப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. [19]

Thumb
அஸ்ஸாமில் உள்ள மடங்கள் மற்றும் கோயில்கள்; இதன் நடன அரங்குகள் நம்கர் என அழைக்கப்படுகின்றன. மேலே: நமகர் நுழைவு.

சத்ரியாவின் நவீன வடிவத்திற்கு உயிர் கொடுத்தவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கரதேவா என்பவராவார். இவர் பண்டைய நூல்களைப் பயன்படுத்தி நடனத்தை முறைப்படுத்தியதோடு கிருஷ்ண் பக்திக்கான ஒரு சமூகக் கலையின் ஒரு வடிவமாக நாடகம், நடனம் (நிருத்தா, நிருத்தியா) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.[3] [7] [19]

15 நூற்றாண்டு முதல், சத்ரியா நாட்டிய நாடகக் கலையானது, சத்ரா எனப்படும் இந்து மத மடாலயங்களில் வைணவ பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக வளர்ந்தது. [7] கிருஷ்ணரின் புனைவுகள் மற்றும் புராணங்களைப் பற்றிய நடன-நாடகங்கள், குறிப்பாக பாகவத புராணம் போன்ற நூல்களிலிருந்து இந்த கலையைத் துறவிகள் உருவாக்கி நடைமுறைப்படுத்தினர். [20] கோயில்கள் மற்றும் மடாலயங்களின் உள்ளே சத்ரியா நடனம் எந்தவொரு தனித்துவமான சிலை முன்பும் நிகழ்த்தப்பட்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நம்கர் எனப்படும் நடன அரங்கத்தில் சூரியன் உதிக்கும் கிழக்குப் பக்கத்தில் மனிக்குட் எனப்படும் மூலையில் பாகவத புராணத்தின் ஒரு பிரதியை வைத்திருப்பர். இதன் முன்பு சத்ரியா நிகழ்த்தப்படுகிறது.

இந்த நடன-நாடகங்கள் ஆரம்ப நாட்களில், அசாமி கவிஞர்-துறவி சங்கராதேவா மற்றும் அவரது முதன்மை சீடரான மாதவதேவா ஆகியோரால் எழுதப்பட்டு இயக்கப்பட்டவை. அவை பெரும்பாலும் 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன. [21] ஒரு முறை ஆண் துறவிகளின் களமாக இருந்த இது இப்போது ஆண் மற்றும் பெண் நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாதியில், சத்ரியா நிருத்யா வானது அசாமின் சத்திரங்களிலிருந்து அதாவது/ மடங்களின் கருவறையிலிருந்து பெருநகர நிலைக்கு நகர்ந்தது . [22]

சங்கீத நாடக அகாடமி சத்ரியா நிருத்யாவை 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ செவ்வியல் நடனமாக அங்கீகரித்தது. சத்ரிய நடனக் கலைஞர்கள் இப்போது உலகின் பல பகுதிகளிலும் மேடைகளில் சத்ரியா நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார்கள்.[21]

Remove ads

இசைத்தொகுப்பில்

Thumb
சத்ரியா நடனத்தின் பாரம்பரிய தோரணை.

இந்திய பாரம்பரிய நடனங்களின் பள்ளிகளைப் போன்று, சத்ரியாவும் நாட்டிய சாத்திரம், அபிநய தர்பனா, சங்கர தேவாவின் சங்கீத ரத்னாகரா போன்ற செவ்வியல் நடன வடிவத்திற்குத் தேவையான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உள்ளடக்கிது.[23] சங்கர தேவாவின் சங்கீத ரத்னாகராஎ ன்ற நூலும் பக்தி ரத்னாகரா என்ற நூலும் பண்டைய உபநிடதங்கள், பகவத் கீதை, யோகா மற்றும் வேதாந்தா கருப்பொருள்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அகிம்சை உண்மை போன்ற மேலும் பல விழுமியங்களைக் கொண்ட ஒரு இறையியல் அடித்தளத்தை சத்ரியாவுக்கு வழங்குகிறது. [24] சங்கராதேவாவிடம், மத விழுமியங்கள், நெறிமுறைகள், வாழ்க்கையின் மகிழ்வுகள், நிகழ்த்துக் கலைகள் ஆகியவை நெருக்கமாக இணைக்கப்பட்டன, மேலும் இந்து மடங்களின் தலைவர்களிடம் அவர்கள் இறப்பதற்கு முன், குறைந்தபட்சம் ஒரு நாடகத்தையாவது இசையமைக்குமாறு சங்கரதேவா கேட்டுக் கொண்டார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads