சந்திரகலா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரகலா (Chandrakala) தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
திரைப்பட வாழ்க்கை
1963 இல் கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். மேலும், ராஜ்குமார், கல்யாண் குமார், உதய் குமார், ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்தார். 1971 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசன் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தமிழில் வெளியான பிராப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய அலைகள் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். காலங்களில் அவள் வசந்தம், உலகம் சுற்றும் வாலிபன், மூன்று தெய்வங்கள் (நடிகர் சிவகுமாரின் இணை ) ஆகியவை இவரது மற்ற இவர் மென்மையான பாத்திரங்களுக்காக நன்கு அறியப்பட்டார். சம்பூர்ண இராமாயணத்தில் (1971), சீதா தேவியின் நடிப்பில் பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தார்.
இவர் தனது காலத்தின் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுடன் நடித்தார். தெலுங்கில் இவர் என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜூ தமிழில் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், முத்துராமன் ஆகியோருடன் நடித்தார். நோமு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது இவரது மிகப்பெரிய வெற்றி எனலாம்.
Remove ads
இறப்பு
சந்திரகலா 21 ஜூன் 1999 அன்று 48 வயதில் புற்றுநோயால் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads