சந்திரபூர் மாவட்டம், வங்காளதேசம்
வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரபூர் மாவட்டம்,வங்காளதேசம் (Chandpur District) (চাঁদপুর জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1] வங்காளதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சந்திரபூர் நகரம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்
சந்திரப்பூர் மாவட்டத்தின் வடக்கில் கொமில்லா மாவட்டம் மற்றும் முன்சிகஞ்ச் மாவட்டத்தின் சில பகுதிகளும், தெற்கில் நவகாளி மாவட்டம், பரிசால் மாவட்டம் மற்றும் லெட்சுமிபூர் மாவட்டங்களும், கிழக்கில் கொமில்லா மாவட்டமும், மேற்கில் சரியத்பூர் மாவட்டம், மெக்னா ஆறு மற்றும் முன்சிகஞ்ச் மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
1645.32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக சந்திரபூர் சதர், மொத்லோப் வடக்கு, மொத்லோப் தெற்கு, ஹய்ம்சார், ஹாஜிகஞ்ச், கச்சுவா, சரஸ்வதி மற்றும் பரித்கஞ்ச் என எட்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் ஏழு நகராட்சி மன்றங்களையும், எண்பத்தி எட்டு கிராம ஒன்றியக் குழுக்களையும், 927 வருவாய் கிராமங்களையும், 1230 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 3600 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0841 ஆகும். இம்மாவட்டம் ஐந்து வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]
Remove ads
பொருளாதாரம்
இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைச் சார்ந்து உள்ளது. தகாதியா ஆறு, மெக்னா ஆறு, மொத்லாப் ஆறு, உத்தம்தி ஆறு, தோனாகோடா முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்ட இம்மாவட்டத்தில் நெல், சணல், கரும்பு, உருளைக்கிழங்கு, கடுகு, வெற்றிலை, பாக்கு, சோயா, மிளகு, காய்கறிகள் பயிரிடப்படுகிறது.
மக்கள் தொகையியல்
1645.32 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 24,16,018 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,45,831 ஆகவும், பெண்கள் 12,70,187 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.61% ஆக உள்ளது. பாலின விகிதம் 90 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நபர்கள் 1468 வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 56.8% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
Remove ads
கல்வி
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads