சந்திர குலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திர குலம் அல்லது சந்திர வம்சம் என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. [1]
சந்திர குலத் தோற்றம்
சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. தேவர்களின் குருவான பிருகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிச் சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் இளைஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.
தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துச் சென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.
ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். புரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.
தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பிருகஸ்பதி ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். புரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.
Remove ads
சந்திர குல அரசர்கள்
தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும், இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.[2] தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.
- சந்திர வம்சம்
- சந்திரன்-(தாரை)
- புதன்-(இலா)
- புரூரவன்
- நகுசன்
- யயாதி
- புரு
- துரஸ்வன்
- வக்ரி
- கோபானன்
- காந்தன்
- துர்யசித்தன்
- குரு
- துஷ்யந்தன்
- பரதன்
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்திராங்கதன்
- விசித்திரவீரியன்
- திருதராட்டிரன்
- பாண்டு
- விதுரன்
- பாண்டவர்
- கௌரவர்
- அபிமன்யு
- பரீட்சித்து
- ஜனமேஜயன்
Remove ads
காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads