மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சர்

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Natural Resources and Environmental Sustainability of Malaysia; மலாய்: Menteri Sumber Asli dan Kelestarian Alam Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

விரைவான உண்மைகள் மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சர் Minister of National Unity of MalaysiaMenteri Perpaduan Negara Malaysia ‎, சுருக்கம் ...

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும்; நல்லிணக்கம், இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும்; உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும். இந்த அமைச்சு ஓர் அமைச்சர்; மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது.[1]

இந்த அமைச்சு முன்பு மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒற்றுமை இலாகா எனும் பெயரில் (Department of the Prime Minister of Malaysia) இயங்கியது. 1 சூலை 1969-இல் மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறையை (Department of National Unity) நிறுவியதன் மூலம் இந்த அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டது.

Remove ads

பொது

1969 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, மலேசியா அனுபவித்த மே 13 நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பிரதமர் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை முதலில் நிறுவப்பட்டது. 1972-இல், தேசிய ஒற்றுமை அமைச்சு (Ministry of National Unity) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.

தேசிய ஒற்றுமை இலாகா, 1980-ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்தது. 1990 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of National Unity and Community Development) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் புதிய அமைச்சு 2004-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது.

2004-ஆம் ஆண்டு, இந்த அமைச்சு பிரதமர் துறையில் மீண்டும் ஒரு துறையாக (Department) இணைக்கப்பட்டது. மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, இந்த ஒற்றுமைத் துறை மீண்டும் ஒரு முழு அமைச்சாக மாற்றப்பட்டது

Remove ads

தேசிய ஒற்றுமை அமைச்சர்கள்

மலேசிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:

       மலேசிய கூட்டணி / பாரிசான் நேசனல்       சரவாக் கூட்டணி

மேலதிகத் தகவல்கள் தோற்றம், பெயர் (பிறப்பு - இறப்பு)தொகுதி ...
Remove ads

பிரதமர் துறை அமைச்சர்கள்

மலேசியப் பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை ஒருங்கிணைப்பு துறையில் அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:

       மலேசிய கூட்டணி / பாரிசான் நேசனல்

மேலதிகத் தகவல்கள் தோற்றம், பெயர் (பிறப்பு - இறப்பு)தொகுதி ...

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads