அன்வார் இப்ராகிம் அமைச்சரவை

மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை From Wikipedia, the free encyclopedia

அன்வார் இப்ராகிம் அமைச்சரவை
Remove ads

அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Anwar Pertama; ஆங்கிலம்: Anwar Ibrahim First Cabinet; சீனம்: 安瓦尔·易卜拉欣第一内阁); என்பது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை ஆகும்.

விரைவான உண்மைகள் அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை Anwar Ibrahim First Cabinet, உருவான நாள் ...

மலேசியாவின் 10-ஆவது பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு, 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, இந்த 23-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (Unity Government) அமைக்குமாறு மலேசியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) அவர்கள்; அன்வார் இப்ராகிமைக் கேட்டுக் கொண்டார்.[1]

2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அமைச்சர்களின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.[2]

Remove ads

பொது

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த அழைப்பை பெரிக்காத்தான் நேசனல் நிராகரித்து; எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்தது.

எனவே, இந்த அமைச்சரவை பாக்காத்தான் ஹரப்பான் (PH) தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கம் நிறுவப்பட்டு இருப்பதை பிரதிபலிக்கின்றது. இந்த அமைச்சரவைக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை (மலாய்: Kabinet Perpaduan Nasional; ஆங்கிலம்: National Unity Cabinet; என்று பெயரிடப்பட்டுள்ளது.

Remove ads

அமைவு

2022 டிசம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி, ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சர்கள்:[3]

     பாக்காத்தான் (15)      பாரிசான் (6)      ஜிபிஎஸ் (5)      ஜிஆர்எஸ் (1)      சுயேட்சை (1)

அமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் நிலை, படிமம் ...
Remove ads

துணை அமைச்சர்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads