சரண்யா துராடி சுந்தர்ராஜ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரண்யா துராடி சுந்தர்ராஜ் ( பிறப்பு:22 அக்டோபர், 1987) ஓர் தமிழ் செய்தி வாசிப்பாளர், மாதிரி நடிகை மற்றும் நடிகை ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை (2017-2019) என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆனார்.[1] இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவான உண்மைகள் சரண்யா துராடி சுந்தர்ராஜ், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

சரண்யா துராடி சுந்தர்ராஜ் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு சென்னை யில் பிறந்தார். இவரது அப்பா சுந்தர்ராஜ் ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். அவர் எம். ஓ. பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, அங்கு அவர் ஒளிபரப்பு தொடர்பு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சேர்ந்தார். அந்தத் தொலைக்காட்சியில் செய்தி நிருபராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களின் செய்தி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். புதிய தலைமுறையில் பணிபுரியும் போது, ​​அவருக்கு இரண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது; சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 4 ஆண்டுகள் பணியாற்றியனார். இவரின் பணியை போற்றி புதிய தலைமுறை தமிழன் விருது என்ற விருதுவழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் வேலையை விட்டுவிட்டு சில மாதங்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் இந்தியா திரும்பிய அவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் மூத்த செய்தி நிருபராக சேர்ந்தார்.

இவர் 2015ஆம் ஆண்டு வினோதி என்ற காதாபாத்திரத்தில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை[2][3] என்ற தொடரில் சரண்யா விக்ரம் என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேட்ப்பை பெற்றது. இதில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.

அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற தெலுங்கு மொழி தொடரில் நடித்தார். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற தொடரின் தெலுங்கு மொழி மறு ஆக்கம் ஆகும். அதே ஆண்டில் சன் தொலைக்காட்சியில் தொடரான ரன் என்ற தொடரில் 'திவ்யா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். அத்தியாயம் 86 இருந்து அந்த தொடரில் விலகி விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்தார்.

Remove ads

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

திரைப்படம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads