நெஞ்சம் மறப்பதில்லை (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

நெஞ்சம் மறப்பதில்லை (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

நெஞ்சம் மறப்பதில்லை விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் தேதி 2017 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 20ம் தேதி 2018 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'குசும் தோலா' எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் நெஞ்சம் மறப்பதில்லை, வகை ...

இந்த தொடரில் சரண்யா டுராடி சுந்தர்ராஜ், அமித் பார்கவ் மற்றும் சௌமியா ஆகியோர் நடிக்க, அப்துல் ஹபீஸ் இந்தத் தொடரை இயக்க இளையவன் இசை அமைக்கிறார்.[1][2][3][4] இந்த தொடர் பிப்ரவரி 22, 2019 அன்று 358 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதை சுருக்கம்

இந்தத் தொடர் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் முக்கோணக் காதல் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சரண்யா டுராடி சுந்தர்ராஜ்- சரண்யா
    • காவல் அதிகாரியான வேல்ராஜின் மகள், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் தந்தையின் மரணத்திற்கு பிறகு விக்ரமை திருமணம் செய்கிறார்.
  • அமித் பார்கவ் - விக்ரம்[5][6]
    • கூட்டு குடும்ப பிண்ணனியை கொண்ட ஒரு காவல் அதிகாரி, சத்யாவின் முன்னாள் காதலன், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் சரண்யாவை திருமணம் செய்கின்றான்.
  • நிஷா கிருஷ்ணன் (பகுதி:1-120) → சௌமியா (122 - 358) - சத்யா
    • விக்ரமின் முன்னாள் காதலி, தற்பொழுது அர்ஜுனின் மனைவி. தனக்கு விக்ரம் துரோகம் செய்து விட்டான் என நினைத்து அவனையும் சரண்யாவையும் பிரிக்க நினைக்கிறாள்.
  • அஸ்வந்த் திலக் - அர்ஜுன்
    • விக்கிரமின் உறவினர், ஆர்மியில் பணிபுரிகிறார் மற்றும் சத்யாவின் கணவன்.

துணை கதாபாத்திரம்

  • ஸ்ரீ துர்கா - பிரியா
  • அனுராதா - அகிலாண்டேஸ்வரி
  • ராஜா - வேல்ராஜ் (தொடரில் இறந்து விட்டார்)
  • எல். லலிதா - ஜெயா
  • குமரேசன்
  • தரணி - ஸ்ரீதேவி
  • பபிதா -
  • பிரவீன் - திலீபன்
  • முரளி குமார் - பாலச்சந்திரன்
  • கே. எல் மணி - அருண்
  • சியாம்

சிறப்புத் தோற்றம்

  • அபிநயஸ்ரீ
  • ராமர்
  • ராதிகா ராவ்
Remove ads

நடிகர்கள் தேர்வு

கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ டிவியில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்த சரண்யா டுராடி சுந்தர்ராஜ் இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா கிருஷ்ணன், சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகுதி 121 முதல் வள்ளி தொடரில் நடித்த சௌமியா நிஷாவுக்கு பதிலாக நடிக்கின்றார். இவர்களோடு ஸ்ரீ துர்கா, அஸ்வந்த் திலக், அனுராதா, எல். லலிதாபோன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இலக்கு அளவீட்டு புள்ளி

இந்த தொடர் ஆரம்பத்தில் சராசரியாக 5.2% இலக்கு அளவீட்டு புள்ளி பெற்றது. இதன் கடைசி வார பகுதியில் தமிழ் நாடு அளவில் 4.4% இலக்கு அளவீட்டு புள்ளி பெற்று சிறந்த 20 தொடர்களுக்குள் இந்த தொடர் அடங்கும்.

மொழி மாற்றம்

இந்த தொடர் தெலுங்கு மொழியில் 'மனசு மாட்ட விடாகு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் 15 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads