சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (மலாய்: Parti Rakyat Bersatu Sarawak, ஆங்கிலம்: Sarawak United Peoples' Party, சீனம்: 砂拉越人民联合党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். ஆளும் பாக்காத்தான் அரப்பான் - பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாகக் கருதப்படுகின்றது.
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியை சாப் (SUPP ) என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். 1959-ஆம் ஆண்டு இடதுசாரி பொதுவுடைமை அனுதாபிகளினால் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியில் சீனர் மக்களே பெரும்பான்மையாக உறுப்பியம் பெற்றுள்ளனர்.
Remove ads
வரலாறு
இந்தக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் அதன் உறுப்பினர்கள் பலர் கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்காக சரவாக் மாநிலத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர், கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள், இந்தோனேசியா, காளிமந்தான் எல்லைக் காட்டுப் பகுதிக்குள் தலைமறைவாகினர். அங்கு சரவாக் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்களை ஏந்திப் போராட்டம் செய்தனர்.
1960களில் மலேசியா அமைக்கப்பட்ட போது அதற்கு இந்தக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அருகாமையில் இருக்கும் புருணை நாட்டின் புருணை மக்கள் கட்சி, தேசிய பாசோக் மோமோகான் கட்சி போன்ற உள்ளூர்க் கட்சிகளுடன் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் அவைக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தது.
வட போர்னியோ மக்கள், தங்கள் விருப்பப்படி முடிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்; ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டது.[1]
2011 ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநிலப் பொதுத் தேர்தலில், சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி மிக மோசமாகத் தோல்வி கண்டது. அதன் பின்னர் அதன் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாகவும் அமைந்தது.
2008 நாடாளுமன்றத் தேர்தல்
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Remove ads
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads