சரிக்கே

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

சரிக்கே
Remove ads

சரிக்கே (மலாய் மொழி: Sarikei; ஆங்கிலம்: Sarikei) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவு, சரிக்கே மாவட்டத்தின் தலைநகரமாகும். தென்சீனக் கடலில் ராஜாங் ஆறு கலக்கும் இடத்தில் இருந்து 48 கி.மீ. உட்பாகத்தில் சரிக்கே அமைந்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் சரிக்கே நகரம், நாடு ...

இந்த நகரத்தின் மையத்தில் உள்ள 3.6 மீட்டர் உயரமான அன்னாசிச் சிலை, தனித்துவமாக விளங்குகிறது.[3] தவிர சரிக்கே மாவட்டத்தில் மிக உயரமான கட்டிடமான விஸ்மா ஜூப்லி முத்தியாரா (Wisma Jubli Mutiara) இந்த நகரில்தான் உள்ளது.

Remove ads

வரலாறு

1840-ஆம் ஆண்டுகளில், ராஜாங் ஆற்றின் வர்த்தகம் சரிக்கேயில் இருந்த மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களில் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்.

அப்போது சரிக்கேயில் பிரபலமான வணிகப் பொருட்கள்; அரிசி, தேன் மெழுகு, காட்டுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் உலர்ந்த மீன்கள் போன்றவையாகும்.

1845 ஏப்ரல் 30-ஆம் தேதி, ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் சரிக்கேயில் கால் பதித்தார். அவர் அங்கு வந்த போது கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. இபான் மக்களின் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்துல் ரகுமான் இபான் மக்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார்.

1853-இல், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளை ராஜா ஜேம்சு புரூக் பெற்றுக் கொண்டார்.[4]

டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான்

இந்தக் கட்டத்தில் இபான் மக்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த சரிப் மசோர் (Syarif Masahor) என்பவர் இபான் மக்கள் உதவியுடன் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைத் தாக்கினார். தாக்குதலில் வெற்றி அடைந்தார். அத்துடன் 1849 தொடங்கி 1861 வரை சரிக்கே பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார்.

1856-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி, ஜூலாவைச் (Julau) சேர்ந்த டயாக் மக்களால் (Dayaks) சரிக்கே நகரம் எரிக்கப்பட்டது. அதே மாதத்தில், இபான் மக்களின் கடற்கொள்ளைகளை அடக்குவதற்கு, சரிக்கேயில் ஜேம்ஸ் புரூக் ஒரு கோட்டையைக் கட்டினார். பின்னர் சரிக்கே நகரம் ஜேம்ஸ் புரூக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

Remove ads

மக்கள் தொகை

மேலதிகத் தகவல்கள் மொத்தம் மக்கள் தொகை, மலாய்க்காரர் ...

சரிக்கே காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads