சரவாக் பிரதமர்
சரவாக் மாநிலத்தின் அரசாங்கத் தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரவாக் பிரதமர் (மலாய்: Premier Sarawak; ஆங்கிலம்: Premier of Sarawak; சீனம்: 砂拉越州长) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் அரசாங்கத் தலைவரைக் குறிப்பதாகும். யாங் டி பெர்துவா சரவாக் என்று அழைக்கப்படும் மாநில ஆளுநரால் சரவாக் பிரதமர் நியமிக்கப் படுகிறார்.
சரவாக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசியல் கட்சி அல்லது ஓர் அரசியல் கூட்டணியின் தலைவராகவும் சரவாக் பிரதமர் பொறுப்பு வகிக்கிறார்.[1]
Remove ads
பொது
சரவாக் பிரதமர் எனும் இந்தப் புதிய பதவிக்கு முன்பு, அந்தப் பதவி சரவாக் முதல்வர் என்று அழைக்கப்பட்டது. 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சரவாக் முதல்வர் எனும் பதவி; "பிரதமர்" பதவி என்று மறுபெயரிடப் பட்டது. அரசியலமைப்புத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு 2022 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.[2]
சரவாக் மாநிலத்தின் தற்போதைய பிரதமர் அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Abdul Rahman Johari Abang Openg) ஆவார். இவர் 2017 சனவரி 13-ஆம் தேதி சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராக (மந்திரி பெசார்) பதவியேற்றார். தற்சமயம் சரவாக் பிரதமர் என்று அழைக்கப் படுகிறார்.[3][4]
Remove ads
வரலாறு
1963-ஆம் ஆண்டு சூலை 22-ஆம் தேதி சரவாக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட்டது. அப்போது தான் சரவாக்கின் முதலமைச்சர் (Chief Minister of Sarawak) பதவி உருவாக்கப்பட்டது. அந்த வகையில் சரவாக்கின் முதலமைச்சர் பதவியை முதன்முதலாக வகித்தவர் இஸ்டீபன் காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan). சரவாக் வரலாற்றில் முக்கியமானவர் என இன்றும் அறியப் படுகிறார்.[5]
2022 பிப்ரவரி மாதம் சரவாக்கின் முதலமைச்சர் பதவியை பிரதமர் பதவியாக மாற்ற வேண்டும் எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1963-ஆம் ஆண்டு கையெழுத்தான மலேசிய ஒப்பந்தத்தின் (1963 Malaysia Agreement) (MA63) கீழ் சரவாக்கின் உரிமைகளை மீட்பதற்கான முயற்சியாகக் கருதப்பட்டது.[6]
Remove ads
மலேசிய ஒப்பந்தம் 1963
மலாக்கா; பினாங்கு மாநிலங்களிலும் அந்த மாநிலங்களை வழிநடத்த முதலமைச்சர்கள் உள்ளனர். அந்த முதலமைச்சர்களுடன் சரவாக் முதலமைச்சரை ஒப்பீடு செய்வதைத் தவிர்ப்பதற்காக சரவாக் பிரதமர் பதவி முன்மொழியப்பட்டது.[6]
மலேசியா கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது மலேசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய இராச்சியம்; சிங்கப்பூர்; மலாயா கூட்டமைப்பு; சபா ஆகியவற்றுடன் சரவாக் இராச்சியமும் கையெழுத்திட்டது. 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி, "சரவாக் முதல்வர்" எனும் பதவி; "சரவாக் பிரதமர்" பதவி என்று மாற்றம் செய்யப் பட்டது.[6][7]
அபாங் ஜொகாரி ஒப்பேங்
சரவாக் பிரதமர் என்பதற்கான சட்டத் திருத்தம் 2022 மார்ச் 1-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப் பட்டது. ஏற்கனவே சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்த அபாங் ஜொகாரி ஒப்பேங் என்பவர் சரவாக் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். இவர் சரவாக்கின் 6-ஆவது முதலமைச்சரும் கடைசி முதலமைச்சரும் ஆவார்.
சரவாக் முதலமைச்சர்கள் பட்டியல்
1963-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான சரவாக் மாநிலத்தின் முதலமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:
சரவாக் கூட்டணி (Sarawak Alliance) ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA) பாரிசான் நேசனல் சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
Remove ads
சரவாக் பிரதமர்கள்
2022-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான சரவாக் மாநிலத்தின் பிரதமர்களின் பட்டியல் பின்வருமாறு:
Remove ads
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads