சரிக்கே பிரிவு
மலேசியா, சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரிக்கே பிரிவு (மலாய் மொழி: Bahagian Sarikei; ஆங்கிலம்: Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கேயின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.
1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.
Remove ads
பொது
சரிக்கே பிரிவு மாவட்டங்கள்
சரிக்கே பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- சரிக்கே மாவட்டம் (Sarikei District)
- மெராடோங் மாவட்டம் (Meradong District)
- சூலாவ் மாவட்டம் (Julau District)
- பாக்கான் மாவட்டம் (Pakan District)
பொருளாதாரம்
சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.
அன்னாசி பழங்களுக்கும், ஆரஞ்சு பழங்களுக்கும் இந்தப் பிரிவு பிரபலமானது. சரவாக்கில் உள்ள மற்ற இடங்களைப் போலவே மரத் தொழிலும் உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.
மக்கள் தொகை
சரிக்கே பிரிவின் மொத்த மக்கள் தொகை 116,290. மக்கள் தொகையில் பாதி பேர் இபான் இன மக்கள். அதைத் தொடர்ந்து மெலனாவ், மலாய்க்காரர்கள், பிடாயூ மக்கள்; மற்றும் சீனர் மக்களின் ஆதிக்கம் சரிக்கே நகரில் பெரும்பான்மையாக உள்ளது.
நிர்வாகம்

பொது போக்குவரத்து
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads