சரிக்கே மாவட்டம்
சரவாக் மாநிலத்தில் ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரிக்கே மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sarikei; ஆங்கிலம்: Tanjung Manis Sarikei) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்; 985 சதுர கிலோமீட்டர் (380 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் தலைநகரம் சரிக்கே நகரம் ஆகும்.[2]
முன்பு காலத்தில், சரிக்கே நகரம், கோழிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் மையமாக இருந்தது. எனவே அப்போது "சா-ரி-கேய்" என்று அழைக்கப்பட்டது. சா-ரி-கேய் எனும் பெயர் காலப்போக்கில் சரிக்கே என்று மாற்றம் கண்டது.[3]
Remove ads
வரலாறு
1840-ஆம் ஆண்டுகளில், ராஜாங் ஆற்றின் வர்த்தகம்; சரிக்கேயில் இருந்த மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களில் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான் (Datuk Patinggi Abdul Rahman) என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்.[4]
அப்போது சரிக்கேயில் பிரபலமான வணிகப் பொருட்கள்; அரிசி, தேன் மெழுகு, காட்டுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் உலர்ந்த மீன்கள் போன்றவையாகும்.[5]
ஜேம்சு புரூக்
1845 ஏப்ரல் 30-ஆம் தேதி, ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் சரிக்கேயில் கால் பதித்தார். அவர் அங்கு வந்த போது கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. இபான் மக்களின் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்துல் ரகுமான் இபான் மக்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார்.
1853-இல், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளை ராஜா ஜேம்சு புரூக் பெற்றுக் கொண்டார்.[6]
டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான்
இந்தக் கட்டத்தில் இபான் மக்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த சரிப் மசோர் (Syarif Masahor) என்பவர் இபான் மக்கள் உதவியுடன் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைத் தாக்கினார். தாக்குதலில் சரிப் மசோர் வெற்றி அடைந்தார். அத்துடன் 1849 தொடங்கி 1861 வரை சரிக்கே பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார்.
1856-ஆம் ஆண்டு சனவரி 4-ஆம் தேதி, ஜூலாவைச் (Julau) சேர்ந்த டயாக் மக்களால் (Dayaks) சரிக்கே நகரம் எரிக்கப்பட்டது. அதே மாதத்தில், இபான் மக்களின் கடற்கொள்ளைகளை அடக்குவதற்கு, சரிக்கேயில் ஜேம்சு புரூக் ஒரு கோட்டையைக் கட்டினார். பின்னர் சரிக்கே நகரம் ஜேம்சு புரூக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.[7]
Remove ads
முதல் குடியேற்றம்
1864-இல், சீனாவில் இருந்து ஒக்லோ மக்களும் கான்டோனீய மக்களும் சரிக்கேவுக்கு முதன்முதலில் வந்தார்கள். அவர்கள் அத்தாப்புக் குடில்களைக் கட்டி, ஆற்றங்கரையில் மலாய்க்காரர்களுடன் சேர்ந்து வாழ்ந்தனர். கோழிகளை வளர்த்தனர்; மற்றும் காய்கறிகளை நடவு செய்தனர்.
பின்னர் அவர்கள் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கடைவீடுகளை உருவாக்கினர்; மளிகை வியாபாரம் செய்யத் தொடங்கினர். அதன்பிறகு, சிங்கப்பூர் நிறுவனங்களுடனான வர்த்தகத்தையும் சேர்த்து அவர்களின் வணிகங்கள் விரிவடைந்தன.
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads