சர்வைவர் தமிழ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சர்வைவர் தமிழ் என்றும் அழைக்கப்படும் சர்வைவர் என்பது 12 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சியாகும்.[1][2][3] இது சுவீடன் நாட்டை சேர்ந்த சார்லி பார்சன்ஸால் என்பவரால் 1997 இல் உருவாக்கப்பட்ட 'ராபின்சன்' என்ற நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இந்த நிகழ்ச்சி பனிஜய் ஆசியாவால் தயாரிக்கப்படுகிறது[4].

விரைவான உண்மைகள் சர்வைவர் தமிழ், வகை ...

இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.[5][6][7] சர்வைவர் தமிழில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Remove ads

நிகழ்ச்சி வடிவம்

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு பானிஜாய் நிறுவனத்திற்குட்பட்ட வடிவத்தில் முன்தெரியாத தீவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[8][9][10][11] போட்டியில் வெற்றி பெறுபவர் வெளியேற்றதைத் தவிர்த்து 90 நாட்கள் உயிர் பிழைத்த பிறகு 1 கோடி (₹ 1,00,00,000) ரொக்கப் பரிசைப் பெறுவார்.

கண்ணோட்டம்

சார்லி பார்சன்ஸ் உருவாக்கிய அசல் ஸ்வீடிஷ் எக்ஸ்பெடிஷன் ராபின்சன் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி தான் 'சர்வைவர் தமிழ்' ஆகும். அசல் சர்வைவர் போலல்லாமல், சர்வைவர் தமிழ் பிரபல போட்டியாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. போட்டியாளர்கள் (சர்வைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்). எந்த நவீன கால அமைப்புகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தனித்த தீவில் வாழ்கின்றனர். போட்டியின் 'துவக்க நாள்' அல்லது தொடக்கத்தில் சர்வைவர்கள் இரண்டு வெவ்வேறு பழங்குடியினராகப் பிரிக்கப்படுவார்கள். சர்வைவர்கள் தங்கள் பழங்குடியினர், பழங்குடி சபை மற்றும் வெளியேற்றதை எதிர்கொள்வதில் இருந்து பாதுகாப்பாக இருக்க தடை காப்ப நிலைக்கு (immunity) போராட வேண்டும். ஒவ்வொரு வாரமும் தோல்வியடைந்த அணி பழங்குடி சபையில் கலந்து கொள்ள வேண்டும், அங்கு அவர்கள் தங்கள் இணை குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு வாக்களிப்பார்கள். யார் தங்கள் பழங்குடியினரிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் இறுதியில் விளையாட்டிலிருந்து நீக்கப்படுவார்கள்.

தீவின் விதிகள்

சர்வைவர்கள் தேவையான குறைந்த அளவு துணிகளை மட்டுமே தீவுக்கு கொண்டு வர முடியும். அவர்களுடன் தங்கள் பெட்டியை உடன் கொண்டு செல்ல முடியாது. சர்வைவர்கள் அனைவரும் கண்டிப்பாக தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீவு

ஒவ்வொரு பழங்குடி குழுக்களும் தங்குவதற்கு இரண்டு வெவ்வேறு தீவுகள் இருக்கும், மேலும் பணிகள் மற்றும் பழங்குடி ஆலோசனை சபை நடைபெறுவதற்கு ஒரு தனி தீவு இருக்கும்.

சர்வைவர்கள் தாங்கள் இருக்கும் தீவில் கூடாரங்கள் போன்ற தங்குமிடங்களை உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் தீவில் வரையறுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சர்வைவர்கள் தங்கள் உணவை சமைக்க நெருப்பை உருவாக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒளிபரப்பு

தினசரி அத்தியாயங்கள் சர்வைவர்கள் பங்கு பெரும் 'தடை காப்ப நிலை (immunity)' அல்லது 'வெகுமதி (reward)' சவால்கள் போன்ற முக்கியப் பணிகளை முன்வைக்கின்றன மற்றும் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பழங்குடி சபைகளில் கவனம் செலுத்துகின்றன.

Remove ads

நிகழ்ச்சியின் பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் Season, வருடம் ...

பருவங்கள்

பருவம் 1

அர்ஜுன் சர்ஜா தொகுத்து வழங்கும் முதல் பருவம் ஜீ தமிழில் 12 செப்டம்பர் 2021 அன்று ஒளிபரப்பப்பட்டது.[12]

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads