சர்வைவர் தமிழ் 1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்வைவர் தமிழ் 1 என்பது பிரபல சர்வைவர் தமிழ் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் முதல் பருவம் ஆகும். இந்த நிகழ்ச்சி 12 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.[1][2] நடிகர் அர்ஜுன்[3] தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் படப்பிடிப்புகள் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சான்சிபார் மற்றும் தன்சானியா போன்ற தீவுகளில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 90 நாட்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர் ₹1 கோடி ரொக்கப் பரிசைப் பெறுவார்.
Remove ads
போட்டியாளர்கள்
- உறுப்பினர்கள்
இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் விஜயலட்சுமி, நந்தா துரைராஜ், விக்ராந்த், பெசன்ட் ரவி, விஜே பார்வதி, காயத்திரி ரெட்டி, உமாபதி ராமையா, சிருஷ்டி டங்கே மற்றும் லேடி காஷ் போன்ற 16 போட்டியாளர்களில் 8 பேரை பிரபலங்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளிப்படுத்தியது.
- பழங்குடி சபை முடிவின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட போட்டியளரின் வரிசை
- விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, இந்திராஜா மற்றும் ஷ்ருஷ்டி ஆகியோர் விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, காயத்திரி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, பார்வதி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, ராம் விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, விஜயலட்சுமி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, பெசன்ட் ரவி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, அம்சாத் விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- பழங்குடி சபை முடிவின் பிறகு, லட்சுமி பிரியா விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- காயத்திரி, இந்திராஜா மற்றும் சிருஷ்டிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் ஸ்ருஷ்டி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- காயத்திரி, இந்திராஜா மற்றும் பார்வதிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் இந்திராஜா ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- காயத்திரி, அம்சாத் மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் காயத்திரி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- காயத்திரி, பார்வதி மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பார்வதி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- காயத்திரி, பார்வதி மற்றும் ராமுக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் ராம் ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- காயத்திரி, பெசன்ட் ரவி மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பெசன்ட் ரவி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- அம்சாத், லட்சுமி பிரியா மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் லட்சுமி பிரியா ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- நந்தா மற்றும் சரணுக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் நந்தா ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
- இனிகோ பிரபகரன் இப்போட்டியில் இணைந்து கொண்டார், நாள் 19
- வனிசா கூருஸ் இப்போட்டியில் இணைந்து கொண்டார், நாள் 19
Remove ads
சர்வைவர் சிறப்பு காட்சி
தினசரி தொலைக்காட்சியில் 40 நிமிட அத்தியாயங்கள் ஒளிபரப்பப்பட்ட பிறகு, ஜீ5 என்ற ஓடிடி தளத்தில் சர்வைவர் அன்கட் வெளியிடபடுகிறது. இது நீண்ட நீண்ட அத்தியாய நேரத்தைக் கொண்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத நிகழ்வுகள் அல்லது காட்சிகளை வழங்குகிறது.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads