சலாமிஸ் சமர்

கிமு 480 இல் கிரேக்க நகர அரசுகள் கூட்டணி மற்றும் பாரசீகப் பேரரசிற்கு இடையே நடந்த கடற்படைப் போர் From Wikipedia, the free encyclopedia

சலாமிஸ் சமர்map
Remove ads

சலாமிஸ் சமர் (Battle of Salamis, பண்டைக் கிரேக்கம்: Ναυμαχία τῆς Σαλαμῖνος ) என்பது கிமு 480 இல் தெமிஸ்டோகிளீசின் தலைமையின் கீழ் இருந்த கிரேக்க நகர அரசுகளின் கூட்டணிக்கும், மன்னர் செர்கசின் தலைமையின் கீழ் இருந்த பாரசீகப் பேரரசுக்கும் இடையே நடந்த கடற்படைப் போர் ஆகும். இதில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த கிரேக்கர்கள் ஒரு தீர்க்கமான வெற்றியை ஈட்டினர். ஏதென்சுக்கு அருகிலுள்ள சரோனிக் வளைகுடாவில் உள்ள பிரதான நிலப்பகுதிக்கும் சலாமிஸ் என்ற தீவுக்கும் இடையிலான நீரிணையில் போர் நடந்தது. மேலும் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் உச்சபட்ச போராக குறிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் சலாமிஸ் சமர், நாள் ...

பாரசீகப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க, கிரேக்கர்களின் ஒரு சிறிய படை தெர்மோபைலேயில் தரைப்போரில் ஈடுபட்டது. அதே நேரத்தில் ஏதெனியன்கள் ஆதிக்கம் செலுத்திய நேச நாட்டுக் கடற்படை பாரசீக கடற்படையுடன் அருகிலுள்ள ஆர்ட்டெமிசியம் நிரிணையில் மோதியது. இந்த இரண்டு போர்களும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் நடந்தன. அச்சமயத்தில் நடந்த தேமோபைலே போரில், கிரேக்கப் படை அழிக்கப்பட்டது. அதே சமயம் ஆர்ட்டெமிசியம் போரில் கிரேக்கர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். இதனாலும், தெர்மோபைலேயில் ஏற்பட்ட தோல்வியினாலும் கிரேக்கப் படைகள் பின்வாங்கின. இதன் பிறகு பாரசீகர்கள் போசிஸ், போயோட்டியா, அட்டிகா, யூபோயா போன்றவற்றை கைப்பற்றினர். நேச நாடுகளின் கடற்படை கொரிந்தின் பூசந்தியைப் பாதுகாக்கத் தயாராக அருகிலுள்ள சலாமிஸ் தீவுக்கு திரும்ப வந்து சேர்ந்தது.

அதிக எண்ணிக்கையில் உள்ள பாரசீகப் படைகளை இந்த இடத்தில் போருக்கு இழுத்துவந்தால் கிரேக்கக் கூட்டாளிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று ஏதெனியன் கடற்படை தளபதி தெமிஸ்ட்டோக்ளீஸ் கருதினார். இது குறித்து கிரேக்க கூட்டாளிகளிடம் வலியுறுத்தினார். இந்த வெற்றியானது பெலோபொன்னீசுக்கு எதிரான பாரசீக கடற்படையின் நடவடிக்கைகளைத் தடுப்பதாக இருக்கும் என்று நம்பினார். பாரசீக மன்னர் செர்கசசும் ஒரு தீர்க்கமான போரை எதிர்பார்த்து ஆர்வமாக இருந்தார். தெமிஸ்டோக்கிள்சின் தந்திரத்தின் விளைவாக (கிரேக்கக் கடற்படையின் பெரும்பகுதி சலாமிசில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை நேரடியாக செர்கசுக்கு அனுப்பிய செய்தியும் இதில் அடங்கும்). அதனால் பாரசீக கடற்படைகள் இப்பகுதிக்கு விரைந்துவந்தன. சலாமிஸ் விரிகுடாவில் கிரேக்கப் படைகளுக்கும் பாரசீக படைகளுக்கும் இடையில் நடந்த இப்போரைக் காண ஏதுவாக எகேலியசு மலையின் மீது பாரசீக மன்னர் செர்க்ஸஸ் தனியாக அரியாசனத்தை அமைத்து தன் படையின் போர்த்திறத்தை பார்வையிட்டார். [7] பாரசீக கடற்படை சலாமிஸ் நீர்சந்தியில் இரு நுழைவுப் பகுதிகளையும் சுற்றிவளைத்து தடுக்க முயன்றது. நீர்சந்தியின் நெருக்கடியான சூழ்நிலையில், பெரிய எண்ணிக்கையிலான பாரசீக கப்பல்களே அவற்றுக்கு தடையாக இருந்தன. ஏனெனில் கப்பல்களை போர் உத்தியுடன் நகர்த்த போராடி அவை ஒழுங்கற்றதாக மாறின. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கிரேக்கக் கடற்படையினர் வரிசையாக அமைந்து தீர்க்கமான வெற்றியை ஈட்டின.

இதனால் செர்க்ஸெஸ் தனது இராணுவத்தின் பெரும்பகுதியுடன் ஆசியாவிற்கு பின்வாங்கினார், மேலும் கிரேக்கத்தை வெற்றி கொள்ளுவதற்காக தன் படைகளை மார்தோனியசு ஒப்படைத்தார். இருப்பினும், அடுத்த ஆண்டு பாரசீக இராணுவத்தின் எஞ்சிய தரைப் படைகளானது பிளாட்டியா போரிலும், பாரசீக கடற்படை மைக்கேல் போரிலும் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டது. பாரசீகர்கள் கிரேக்க நிலப்பரப்பைக் கைப்பற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சலாமிஸ் மற்றும் பிளாட்டியாவின் இந்தப் போர்கள் ஒட்டுமொத்தமாக கிரேக்க பாரசீகப் போர்களின் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads