சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம் (National Museum of Saudi Arabia) , சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பெரிய தேசிய அருங்காட்சியகம் ஆகும்.[1][2][3] 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அச்சீசின் வரலாற்று மையத்தின் ஒரு பகுதியாகும்.
Remove ads
கட்டிடம்
சவுதி அரேபியாவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நிகழ்ந்தபோது, முராப்பா அரண்மனை மாவட்ட வளர்ச்சித் திட்டத்தில், முராப்பாவைச் சுற்றியுள்ள இடங்களை மறுசீரமைக்கும் பொழுது ஒரு பகுதியாக இத்தேசிய அருங்காட்சியகத்திற்கான முன்னெடுப்புகள் தோன்றின. திட்டமிடல் மற்றும் புதிதாக அருங்காட்சியகக் கட்டிடம் கட்டுதல் போன்ற அருங்காட்சியகக் கருத்துகள் எண்பதுகள் முதல் விவாதிக்கப்பட்டு வந்தன என்றாலும், 1999 ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் இதற்கான காலக்கெடு 26 மாதங்கள் [4] என நிர்ணயிக்கப்பட்டது. முன்னணி கட்டிட வடிவமைப்பாளர் ரேமண்ட் மோரியாமாவை, ரியாத்திற்கு வெளியே இருந்த மணல் திட்டுகளின் வடிவங்களும் சிவந்த மண்ணின் நிறமும் இக்கட்டிட வடிவமைப்பிற்கு ஊக்கமூட்டின [5]. மணல்திட்டின் மென்னெல்லையும், அதன் அமைப்பும் சேர்ந்து மெக்காவை நோக்கி ஒரு பிறை சுட்டுவது போன்ற தோற்றத்தை முராப்பா சதுக்கத்துடன் சேர்ந்த மேற்கு முகப்பு தோன்றுகிறது [4]. அரேபியத் தீபகற்பத்தின் இசுலாமிய வரலாறு முராப்பா சதுக்கத்தின் மேற்கு முகப்பில் திறக்கிறது. பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த உருளையில் பிரவேசிக்கும்பொழுது இவ்வரலாற்றின் இறுதிக்கட்டக் காட்சிகளை அறியமுடியும். கடைசிக் காட்சிக்கூடம் இரண்டு பரிசுத்தமான மசூதிகள் மற்றும் புனிதப் பயணத்தை விளக்குகிறது. மேலும் கூடுதலாக இரண்டு காட்சிக் கூடங்கள் சிறப்புக் கண்காட்சிகள் நடத்துவதற்காக உள்ளன.
கண்காட்சிகள் போதிக்கின்ற நீதிபோதனைகளின் வடிவமைப்புக் கருத்தானது, அருங்காட்சியகங்களின் பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து வேறுபட்டுள்ளது. மதிப்பு மிக்க கலாச்சார சூழலுக்கு வெளியே நிற்கும் தனிப்பட்டவர்களின் கருத்துகளுக்குக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பான பிரதிமைகள் மாதிரிகளின் அதே அளவு கண்காட்சிகள், சில கருத்துகள் மற்றும் பிரச்சினைகள் பற்றிக் கல்வி புகட்டுவது போல் உள்ளன. சில குறிப்பிட்ட மாதிரிகளின் அடையாளம் பிரதிமை, அசல் என வேறுபடுத்திச் சொல்வதற்குக் கடினமாக உள்ளது. தனிப்பட்டவர்களை முன்னிலைப்படுத்துவது இதன் நோக்கமல்ல. மாறாக, அவர்களின் கருத்துகள் மற்றும் பொதுக்கருத்துகளைச் சுட்டிக்காட்டுவதே இப்பிரதிமைகளின் முக்கிய நோக்கமாகும் [5].
Remove ads
கண்காட்சிகள்
காட்சிகள், எட்டு "கண்காட்சி அரங்குகள்" அல்லது " படக்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன [6].
- பிரபஞ்சமும் மனிதனும்
அருங்காட்சியகத்தின் முதலாவது காட்சி அரங்கத்தில் நாம் எதிர்கொள்வது விண்கல் ஒன்றின் பெரிய துண்டு ஆகும். ரப் அல் காலி பாலைவனத்தில் உள்ள விண்கல் விழுந்த வாபர் நிலக்குழிவில் இத்துண்டு காணப்பட்டது. இதைத்தவிர மேலும் இங்கு, சூரியமண்டலம் மற்றும் புவிப்பாறைத் தட்டுகள் தொடர்பான கலந்துரையாடல் காட்சிகள், அரேபியத் தீபகற்பத்தின் மண்ணியல் மற்றும் புவியியல் காட்சிகள், அரேபிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிகளை விளக்கும் காட்சிகள் முதலானவையும் உள்ளன. முற்காலத்தில் வாழ்ந்த இராட்சச உருவம் கொண்ட தாவர உண்ணி மற்றும் கடல் வாழ் பெரிய மீனின் எலும்புக்கூடு ஆகியன பெரிய காட்சிப்பொருளாக இங்கு இடம்பெற்றுள்ளன. கற்கால மனிதனின் காட்சியுடன் இக்காட்சியகம் நிறைவுக்கு வருகிறது.
- அராபியப் பேரரசுகள்
இந்தக் காட்சி அரங்கில் முற்காலத்தில் அரேபியாவில் இருந்த பேரரசுகள் தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. செமித்திய மொழியைப் பேசிய தில்மன் நாகரிகம், மடியான், காரியா, தெமா ஆகிய பேரரசுப் பகுதிகள் மீது இங்கு கவனம் செலுத்தப்படுகிறது. அல்-அம்ரா, தாவ்மத் அல் யண்டால், தெமாசு, தாரவுட் போன்ற நகரங்களின் இடைத்தரகு அரசாட்சி தொடர்பான காட்சிகள் மேலும் இங்கு தொடர்கின்றன. அல் அப்லாய், நச்ரான், ஆயின் சுபைதா நகரங்களில் செழித்து வளர்ந்த பிற்காலத்து அரேபிய நாகரிகங்களின் காட்சிகள் தொடர்பான கருத்துகள் குறிக்கப்பட்டுள்ளன.
- இசுலாத்துக்கு முந்தைய சகாப்தம்
இக்காட்சியரங்கில் இசுலாம் தோன்றிய கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை விளக்குகிறது. இக்காலத்து நகரங்களான மக்கா, யாராசு, காய்பார், நச்ரான், கத்ரமா, தாவ்மட் அல் யண்டால், ஓகாசு, அல்மாயாசு, நச்ரான், அபாசா கடைவீதிகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எழுத்துகள் மற்றும் கையெழுத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த பல உதாரணங்களின் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன [7].
- தீர்க்கதரிசி திட்டம்
அடுத்ததாக இருக்கும் காட்சியரங்கில் தீர்க்கதரிசி முகமதுநபியின் வாழ்க்கை மற்றும் நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சுவரில் நபியின் குடும்பம் மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்ப மரம் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காட்சியகத்திலிருந்து அடுத்த அரங்கிற்குச் செல்ல, பார்வையாளர்கள் ஒரு பாலத்தைப் பயன்படுத்துமாறு பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இசுலாம் என்ற பாலத்தில் சென்றால் இறைவனின் அருளை அடையலாம் என்று மக்களுக்குக் குறிப்பால் உணர்த்துவதாக இப்பாலம் கருதப்படுகிறது.
- அரேபியத் தீபகற்பமும் இசுலாமும்
மெதினாவில் இசுலாம் தோற்றம் தொடர்பாகவும், காலிபாக்களின் தோற்றமும் வீழ்ச்சியும் தொடர்பான காட்சிகளும் அடுத்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முதலாவது சவூதி மாநிலம் வரையிலான அடிமை வம்சம் மற்றும் உதுமானியப் பேரரசு தொடர்பான காட்சிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
- முதல் மற்றும் இரண்டாவது சவூதி மாநிலங்கள்
ஆரம்ப மற்றும் இரண்டாவது சவூதி மாநிலங்களின் பண்பாடும் வரலாறும் இக்காட்சியரங்கில் இடம்பெற்றுள்ளன. திரியாக் நகரத்தின் மிகப்பெரிய மாதிரி ஒன்று கண்ணாடித் தரையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதை விரிவான ஆராய்ச்சிக்கும் உபயோகப்படுத்த இயலும்.
- ஒருங்கிணைப்பு
அரசர் அப்துல் அசீசுக்காக இவ்வரங்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரியாத்தை அவர் எவ்வாறு மீட்டெடுத்தார், அவருடைய பேரரசை எவ்வாறு நிறுவினார் என்பது தொடர்பான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- புனிதப்பயணமும் இரண்டு புனிதமசூதிகளும்
இக்காட்சியரங்கில் மெக்காவும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads