சாகம்பரியின் சௌகான்கள்

6 - 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், ராஜஸ்தானின் சில பகுதிகளை ஆண்ட ஒரு வம்சம் From Wikipedia, the free encyclopedia

சாகம்பரியின் சௌகான்கள்
Remove ads

சாகம்பரியின் சகமனாக்கள் (Chahamanas of Shakambhari ) பேச்சுவழக்கில் சாகம்பரியின் சௌகான்கள் என்றழைக்கப்படும் இவர்கள் 6 - 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இன்றைய ராஜஸ்தானின் சில பகுதிகளையும், அதன் அண்டை பகுதிகளையும் ஆண்ட ஒரு வம்சத்தினர் ஆவர். இவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் சபடலக்சம் என்று அழைக்கப்பட்டது. இவர்கள் சாகமனா சௌகான் ) ராஜ்புத் குலத்தின் மிக முக்கியமான ஆளும் குடும்பமாகும். [2] [3] [4] [5]

விரைவான உண்மைகள் சாகம்பரியின் சகமனாக்கள், தலைநகரம் ...
Thumb
Find spots of the inscriptions issued during the Shakambhari Chahamana reign.[1]

சகமனாக்கள் முதலில் சாகம்பரியில் (தற்போதைய சம்பார் ஏரி நகரம் ) தலைநகரைக் கொண்டிருந்தனர். 10ஆம் நூற்றாண்டு வரை, இவர்கள் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் ஆட்சியாளர்களாக ஆட்சி செய்தனர். முத்தரப்புப் போராட்டத்திற்குப் பிறகு பிரதிகார சக்தி வீழ்ச்சியடைந்தபோது, சகாமனா ஆட்சியாளரான சிம்மராஜா மகாராஜாதிராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இரண்டாம் அஜயராஜா இராச்சியத்தின் தலைநகரை அஜயமேருவுக்கு (நவீன அஜ்மீர்) மாற்றினார். இந்த காரணத்திற்காக, சகாமனா ஆட்சியாளர்கள் அஜ்மீரின் சௌகான்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள், குசராத்தின் சோலாங்கியர்கள், தில்லியின் தோமராக்கள், மால்வாவின் பரமாரர்கள், புந்தேல்கண்டின் சந்தேலர்கள் உட்பட தங்கள் அண்டை நாடுகளுடன் பல போர்களை நடத்தினர். 11 ஆம் நூற்றாண்டிலிருந்து, இவர்கள் முதலில் கசுனிகள், பின்னர் கோரிகள் என முஸ்லிம் படையெடுப்புகளை எதிர்கொள்ளத் தொடங்கினர். 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நான்காம் விக்ரகராசனின் கீழ் சகாமான இராச்சியம் அதன் உச்சத்தை எட்டியது. பொ.ச.1192இல் கோரிகள் பிருத்திவிராச் சௌகானைத் தோற்கடித்தபோது வம்சத்தின் அதிகாரம் முடிவடைந்தது.

Thumb
பிருத்திவிராச் சௌகான், வம்சத்தின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads