சலங்கை ஒலி

From Wikipedia, the free encyclopedia

சலங்கை ஒலி
Remove ads

சலங்கை ஒலி (Salangai Oli) 1983 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ‘சாகர சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும்.[1][2] 1983ல் கே. விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, எஸ். பி. ஷைலஜா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.[3]

விரைவான உண்மைகள் சலங்கை ஒலி, இயக்கம் ...

இத்திரைப்படமானது சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றது. தெலுங்கு பதிப்பான 'சாகர சங்கமம்' பெங்களூர் பல்லவி திரையரங்கில் அதிகபட்சமாக 511 நாட்கள் வரை ஓடியது.[4] தமிழ் மொழியிலும் 100 நாட்கள் மேல் ஓடிய வெற்றி படமாக அமைந்தது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக என நான்கு மாநிலங்களிலும் 100 நாட்கள் மேல் ஓடிய முதல் திரைப்படமாகும்.

Remove ads

கதை

பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து தமிழ் பாடல்களும் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டது.

எண்.பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1"பாலகனகமாய"எஸ். ஜானகிதியாகராஜர்03:52
2"மௌனமான நேரம்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிவைரமுத்து04:20
3"நாத வினோதங்கள்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா04:05
4"ஓம் நமசிவாய"எஸ். ஜானகி04:41
5"தகிட ததிமி"எஸ். பி. பாலசுப்பிரமணியம்04:12
6"வேதம் அணுவிலும்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா05:33
7"வான் போலே வண்ணம்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா04:12

விருதுகள்

இத்திரைப்படமானது 1984இல் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இரசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் ஆசிய பசிபிக் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் விருது பட்டியல், விருது ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads