சாகிர் நாயக்

From Wikipedia, the free encyclopedia

சாகிர் நாயக்
Remove ads

சாகிர் அப்துல் கரீம் நாயக் Zakir Naik ( பிறப்பு: 18 அக்டோபர், 1965) பிரபல இஸ்லாமிய மதபோதகர்,அறிஞர்,சர்வதேச சொற்பொழி வாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார் [1] அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் முறைப்படி மருத்துவம் கற்று பட்டம் பெற்ற ஒரு மருத்துவரும் ஆவார். தற்போது இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகள் இவரது சொற்பொழிவைத் தடை செய்துள்ளன[2][3][4].

விரைவான உண்மைகள் சாகிர் நாயக் Dr Zakir Naik, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் 18 அக்டோபர் 1965 பிறந்த சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஐ ஆர் எப் எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இசுலாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார் .சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் இசுலாமிய மதத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவக்கினர். மத ஆராய்வில் நன்றாகப் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் திருக்குரான் ,இந்துமத வேதங்கள் ,கிறித்துவ , பைபிள்கள், இன்னும் பல புத்தகங்களையும் படித்து மனனம் கொண்டவர்.இவரின் இசுலாமிய அழைப்பு பணியால் பல மற்று மதத்தினரை இசுலாமிய மதத்துக்குள் கொண்டுள்ளர்.2001 செப்டம்பர் முதல் 2002 ஜூலை வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34000 ம் அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்துள்ளார்.[5] இந்தியாவின் பிரபல இசுலாமிய இதழான இஸ்லாமிய குரல் பத்திரிகையில் அவரது கட்டுரை சில வெளி வந்துள்ளன இஸ்லாமிய குரல் (இதழ்)''.[6]

Remove ads

விரிவுரைகள் மற்றும் மற்றும் விவாதங்கள்

சாகிர் நாயக் உலகம் முழுவதும் பல விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை நடத்தி உள்ளார் அணைத்து மத தகவல்களையும் இவர் மனப்பாடம் செய்து வைத்துள்ளதன் காரணமாக விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை மிகவும் வேகமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு அளிப்பதன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்[7][8]*

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • 2013 ன் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான துபாய் சர்வதேச குர்ஆன் விருது [9][10] துபாய் ஆட்சியலறன ஹம்டன் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் வழங்கப்பட்டது.

சர்ச்சைகள்

  • இந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறது சாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சாகிர் நாயக்கின் கருத்தை வால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார்.[11] மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.
  • சாகீர் நாயக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகள் தடை செய்துள்ளன.[12] இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது.[13][14]
  • தாருல் உலூம் எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது.[15][16]
  • சாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர் டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார்.[17] மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.
  • சாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார் மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் என இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சுணி பிரிவைச் சேர்ந்த முஸ்லீம்களிலுள்ள முல்லாக்கள் கூறுகின்றனர்.[18]
  • அல் காயிதா அமைப்பை சாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாக்கிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார்.[19]
  • 2008 ஆம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) சாகிர் நாயக் ஒசாமா பின் லாடனை ஆதரிக்கிறார் என்றும் மேலும் இவருடைய பேச்சுகள் இஸ்லாம் அல்ல என்றும் இவர் மீது ஃபத்வா விதிக்கிறார்.[20]
  • லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பிடமிருந்து சாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திரிகையாளர் 'ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூலைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.[சான்று தேவை]
  • ஜாகீர் நாயக், தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதும், பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததும் குறித்து தேசியப் புலனாய்வு முகமை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.[21] இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ஜாகீர் நாயக்கை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வர, இந்திய அரசு இண்டர் போல் உதவியை நாடியுள்ளது.[22]
  • மலேசியப் பிரதமரைவிட, இந்தியப் பிரதமர் மீது மலேசிய இந்தியர்கள், அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று, மலேசியாவில் நிரந்தரமாக தங்கியுள்ள, ஜாகீர் நாயக் பேசியதால், அவரை மலேசியாவை விட்டு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.[23][24]
  • இந்நிலையில் மலேசியப் பிரதமர் மகாதீர், ஜாகிர் நாயக்கை இனவாத அரசியல் பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். மேலும் மலேசியாவின் சில மாகாணங்கள் ஜாகீர்நாயக்கை மதப்பிரச்சாரங்கள் செய்வதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதித்துள்ளது.[25]
  • ஜாகீர் நாயக் தனது இனவாத பேச்சுக்கு மலேசியாவாழ் இந்தியர்கள் மற்றும் சீனர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.[26]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads