சாகேத் குஷ்வாஹா

From Wikipedia, the free encyclopedia

சாகேத் குஷ்வாஹா
Remove ads

சாகேத் குஷ்வாஹா (Saket Kushwaha) என்பவர் இந்தியக் கல்வியாளர் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர் ஆவார். இவர் அருணாச்சல பிரதேசத்தின் ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பீகார் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.

விரைவான உண்மைகள் சாகேத் குஷ்வாஹா, பிறப்பு ...
Remove ads

கல்வி

குஷ்வாஹா 1963ஆம் ஆண்டு ஆகத்து 28ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் உள்ள பீம்செனில் பிறந்தார்.[1] இவரது தந்தை, சுரேந்திர சிங் குஷ்வாஹா, பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.[1] இவர் ராஞ்சி பல்கலைக்கழகம், ஜார்கண்ட்[2] மற்றும் மகாத்மா காந்தி காசி வித்யாபீட்ம், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.[3] சாகேத் குஷ்வாஹா விவசாயத்தில் இளநிலை (1983) மற்றும் முதுநிலை (1986) மற்றும் முனைவர் (1992) பட்டங்களை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வு விவசாயப் பொருளாதாரம் குறித்தது.[4]

Remove ads

பணி

குஷ்வாஹா நைஜீரியாவின் கூட்டாச்சிதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், மேலாண்மைப் பள்ளி புலத்தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[5] 2006-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.[5] 2014-ல் இவர் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6][7] இங்கு இவர் 2017 வரை பணியாற்றினார். பின்னர் 2017 முதல் 2018 வரை பனாரசு பல்கலைக்கழக ராஜீவ்காந்தி தெற்கு வளாகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8] From 2017 to 2018 he served as professor-in-charge for Rajiv Gandhi South Campus Banaras Hindu University.[4][9] இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads