ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் (Rajiv Gandhi University) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். முன்னர் இது அருணாசல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மாநில தலைநகரான இட்டா நகரிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ள தோய்முக்கு நகரில் ரோனோ மலையில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி இந்த மாநிலத்திற்கு வருகை தந்தபோது இப்பல்கலைக்கழகம் ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
Remove ads
நிலை
ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் 9 ஏப்ரல் 2007 முதல் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒரு மத்திய பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம்,பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றுள்ளது.[2]
அமைப்பு மற்றும் நிர்வாகம்
துறைகள்
- வேளாண் அறிவியல்
- வேளாண்மைத் துறை
- உணவு தொழில்நுட்பத் துறை
- உழவியல் துறை
- வேளாண் பொருளாதாரம் துறை
- வேளாண் பூச்சியியல் துறை
- வணிகவியல் மற்றும் மேலாண்மை ஆய்வுகள்
- கல்வித்துறை
- கல்வித்துறை
- உளவியல் துறை
- மொழிகள்
- உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல்
- உடற்கல்வி துறை
- விளையாட்டு உயிரிய விசையியல்துறை
- விளையாட்டு உடலியல் துறை
- விளையாட்டு உளவியல் துறை
- வலிமை பயிற்சி மற்றும் கண்டிஷனிங் துறை
- சமூக அறிவியல்
- மானுடவியல் துறை
- பொருளாதார துறை
- வரலாற்றுத் துறை
- அரசியல் அறிவியல் துறை
- சமூகவியல் துறை
- சமூகப்பணித் துறை
- நுண்கலை மற்றும் இசைத் துறை
- தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் துறை
- அடிப்படை அறிவியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
- உயிர்அறிவியல்
- தாவரவியல் துறை
- விலங்கியல் துறை
- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- மின்னணுப் பொறியியல் மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- மக்கள் தொடர்பு துறை
நிறுவனம் மற்றும் மையங்கள்
- அருணாச்சல பழங்குடி ஆய்வு நிறுவனம்
- தொலைதூரக் கல்வி நிறுவனம்
- பல்லுயிர் பெருக்கச் சிறப்பு மையம்
- கணினி மற்றும் தகவல் மையம்
- பெண்கள் ஆய்வு மையம்
- உயிர்தகவல் மையம்
- இளைஞர் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ ஆய்வுகளுக்கான மையம்
- மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம்
- உடற்கல்வி மையம்
இணைவுக் கல்லூரிகள்
2020ஆம் ஆண்டின் படி இப்பல்கலைக்கழகத்துடன் 36 கல்லூரிகள் இணைவுப் பெற்றக் கல்லூரிகளாக இருந்தன.[3] அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் முன்னர் வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளாக இருந்தன. இவற்றில் குறிப்பிடத்தக்கன:
Remove ads
மாணவர் வாழ்க்கை
விழாக்கள்
அருணாசல் பனோரமா எனும் அருணாச்சலப் பிரதேச பன்முகத்தன்மைக் குறித்த கலாச்சார விழா
துணைவேந்தர் கோப்பைக்கான கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா.[சான்று தேவை]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads