சாக்ஷி சிவானந்த்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாக்ஷி சிவானந்த் (Sakshi Shivanand, பிறப்பு: ஏப்ரல் 15, 1977) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி படங்களில் நடித்துள்ளார்.[1] இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு அனுபவ் சின்ஹா இயக்கிய ஆப்கோ பெஹ்லே பீ கஹின் தேகா ஹை ஆகும். இதில் பிரியான்ஷு சாட்டர்ஜி, ஓம் பூரி, ஃபரிதா ஜலால் ஆகியோருடன் இணைந்து நடித்தார். பிரபல அசைவூட்ட தொலைக்காட்சித் தொடரான தி ஸ்டோரி ஆஃப் சிண்ட்ரெல்லாவில் சிண்ட்ரெல்லாவிற்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார். இது இந்தியாவில் ஜஸ்ட் கிட்ஸ்! சஹாரா டிவியில் ஒளிபரப்பானது.[2]
சிவானந்த் 1996 இல் பாலிவுட்டில் அறிமுகமானார். தனது ஆரம்ப கால தொழில் வாழ்க்கையின் போது, இவர் ஆதித்யா பஞ்சோலியுடன் இணைந்து ஜான்ஜீர் (1998) படத்தில் நடித்தார். பின்னர் இவர் டோலிவுட்டில் குறுகிய காலத்திற்குள் புகழ் பெற்றார்.[3] தெலுங்குத் திரைப்படத் துறையில் பல பெரிய நாயகர்களுடன் இணைந்து நடித்தார். தெலுங்கில் அறிமுகமான இவர் மாஸ்டர் படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்தார். பின்னர் இவர் நாகார்ஜூனாவுடன் சீதாராமராஜு என்ற படத்தில் நடித்தார். மேலும் பாலகிருஷ்ணாவுடன் வம்சோத்தரகுடு படத்தில் நடித்தார். ராஜசேகருக்கு ஜோடியாக சிம்மராசியிலும், மகேஷ்பாபுக்கு ஜோடியாக யுவராஜுவிலும் நடித்தார். இவர் தெலுங்கு படமான ராஜஹம்ஷாவில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார். யமஜாதகுடு மற்றும் கலெக்டர் காரு என்ற சமூக-கற்பனை படத்திலும் நடித்தார். 2000 ஆம் ஆண்டில், மகேஷ் பாபு மற்றும் சிம்ரன் பாகா ஆகியோருடன் யுவராஜு படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு ஜே. டி. சக்ரவர்த்தி இயக்கிய ஹோமம் படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு இவர் ஆடினார்.
இவரது தங்கையான ஷில்பா ஆனந்த் ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார்.[4]
Remove ads
திரைப்படவியல்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

